உங்கள் முழங்காலில் மச்சம் இருக்கா? – அப்ப அதிர்ஷ்டசாலி தான்!
சாமுத்ரீக சாஸ்திரத்தின் படி, முழங்காலில் உள்ள மச்சம் ஒருவரின் ஆளுமை, வாழ்க்கைப் பயணம் ஆகியவற்றைப் பற்றி வெளிப்படுத்தும். வலது முழங்காலில் மச்சம் உள்ளவர்கள் நடைமுறைக்கு ஏற்றவர்களாக , கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இடது முழங்காலில் மச்சம் உள்ளவர்கள் வலிமையான மன உறுதியுடன், தங்கள் இலக்குகளை அடைபவர்கள் என சொல்லப்படுகிறது.

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை பல்வேறு விதமான சாஸ்திரங்கள் நடைமுறையில் உள்ளது. தனி மனித உடல் தொடங்கி வாழ்க்கை வரை அத்தனையும் சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் சாமுத்ரிக் சாஸ்திரம். இது ஒரு பண்டைய இந்திய அறிவியல் சாஸ்திரமாகும். இது ஒரு நபரின் ஆளுமை, எதிர்காலம் மற்றும் மன நிலையைப் புரிந்துகொள்ள உடலின் பல்வேறு பாகங்களைப் பற்றி அறிந்து கொள்வதாகும். உடலில் உள்ள மச்சங்கள், தழும்புகள், உடல் உறுப்புகளின் அமைப்பு அடிப்படையில் ஒரு நபரின் ஆளுமை பற்றியும் இது கூறுவதாகும். எனவே சாமுத்ரிக் சாஸ்திரத்தின் படி முழங்காலில் உள்ள மச்சம் இருந்தால் ஒருவரின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது பற்றிக் காணலாம்.
ஒருவேளை உங்களுக்கு முழங்காலில் மச்சம் இருந்தால் எப்போதும் புதிய இடங்கள் மற்றும் புதிய கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேலும் எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருப்பீர்கள். எல்லாவற்றிலும் என்ன இருக்கும் என ஆர்வமுடன் விசாரிக்கும் தன்மையையும் கொண்டுள்ளனர். வெவ்வேறு புதிய இடங்களுக்குச் சென்று புதிய மக்களைச் சந்திக்க விரும்புவீர்கல். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்.
வலது முழங்காலில் மச்சம்
ஒருவேளை வலது முழங்காலில் மச்சம் உள்ளவர்கள் நடைமுறைக்கு ஏற்றவர்களாக செயல்படுவார்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் நம்பகமானவர்களாக திகழ்வார்கள். அத்தகையவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள். தவறு ஏற்பட்டாலும் பிறரை பழி சொல்ல மாட்டார்கள். வலது முழங்காலில் மச்சம் உள்ளவர்கள் திட்டமிட்ட முறையில் வேலை செய்வதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
Also Read: அதிகாலை கனவில் இதெல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
ஒரு குழுவாக வேலை செய்யும் போது தங்கள் வாழ்க்கையில் அதிக வெற்றியைப் பெறுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணை, அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு விசுவாசமாக இருப்பது மட்டுமல்லாமல், உறவைப் பேணுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அத்தகையவர்கள் மிகவும் பொறுமையாகவும் புரிந்துகொள்ளும் தன்மையுடனும் இருப்பார்கள்.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், வலது முழங்காலில் மச்சம் உள்ளவர்கள் கடினமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்கள் எந்த பேராசைக்கும் ஆளாக மாட்டார்கள். அத்தகையவர்களை தற்புகழ்ச்சி செய்வதன் மூலமோ அல்லது லஞ்சம் கொடுப்பதன் மூலமோ யாரும் அவரை அசைக்கக்கூட முடியாது.
Also Read: வீட்டிற்குள் செருப்பு அணிவீர்களா? – இந்தெந்த பிரச்னை வரலாம்!
இடது முழங்காலில் மச்சம்
இடது முழங்காலில் மச்சம் இருப்பது அது வலுவான மன உறுதியின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அத்தகையவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் பயப்படுவதில்லை. அவர்கள் வலுவான உறுதியுடன் தங்கள் இலக்குகளை அடைகிறார்கள். இடது முழங்காலில் மச்சம் உள்ளவர்களின் உறவுகளைப் பற்றி நாம் பேசினால், அவர்கள் இயல்பிலேயே காதல் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த ஒரு வலுவான ஆசை கொண்டிருப்பார்கள். அத்தகையவர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிப்பதாகக் கூறப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. இதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)