AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தது பாஜகவின் சித்து விளையாட்டி – திருமாவளவன் விமர்சனம்..

Thirumavalavan: கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்: “செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய நிலையில் அவரது நடவடிக்கைகள் எந்தக் கட்சிக்கும் சாதகமல்ல. தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணைந்தது அவருடைய தனிப்பட்ட விருப்பம்" என குறிப்பிட்டுள்ளார்,

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தது பாஜகவின் சித்து விளையாட்டி – திருமாவளவன் விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 30 Nov 2025 09:24 AM IST

கோவை, நவம்பர் 30, 2025: அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இந்த செயல் பாஜகவின் “சித்து விளையாட்டு” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். ஆனால், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை வெளியில் பகிர்ந்ததற்காக அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்:

இந்த சூழலில், தேவர் ஜெயந்தி அன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது பெரும் விவாதத்தை உருவாக்கியது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். இது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பணியாற்றி வந்தவர். அவரை திடீரென கட்சியிலிருந்து நீக்கியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

த.வெ.கவில் இணைந்த செங்கோட்டையன்:

அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையப் போவதாக தகவல் வெளியாகியது. அதன் பிறகு அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் மாலையே நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்று சந்திப்பு நடத்தினார்.

மேலு படிக்க: ஆபத்தில் ஓடியவர்கள், “தவெக குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்”.. சபாநாயர் அப்பாவு தாக்கு!!

அதன்பின் சரியாக நவம்பர் 27, 2025 அன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அவர் இணைந்தார். அவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன் முடிவு – பாஜக சித்து விளையாட்டு – திருமாவளவன்:

இந்நிலையில், கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்: “செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய நிலையில் அவரது நடவடிக்கைகள் எந்தக் கட்சிக்கும் சாதகமல்ல. தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணைந்தது அவருடைய தனிப்பட்ட விருப்பம். பாஜகவால் அதிமுக உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்திற்கு சென்றது பாஜகவின் சித்து விளையாட்டுகளில் ஒன்றாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: +2 மாணவியுடன் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 12 மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் விரைவில் தொடங்கும் நிலையில், இந்தப் பணிகளைப் பற்றிய ஆய்வறிக்கை கேட்கவும், கேள்விகள் எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மிகுந்த பணி அழுத்தத்தால் மனவேதனையில் ஆழ்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது. “இது மிகவும் கவலைக்கிடமான விஷயம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow Us