Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எலிக்கு தலையாக இருக்க கூடாது… தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் தலைவர் செங்கோட்டையன் இணைந்துள்ள நிலையில், எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பதே மேல் என ஜெயக்குமார் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் கடைசி வரை அதிமுகவை விட்டு விலக மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.

எலிக்கு தலையாக இருக்க கூடாது… தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
விஜய் - செங்கோட்டையன் - ஜெயக்குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Nov 2025 18:27 PM IST

சமீபத்தில் அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட செங்கோட்டையன் (Sengottaiyan) விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதற்காக அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். அவருக்கு மாநிலக் குழுவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு மாவட்டங்களுக்கான அமைப்பு செயலாளராகவும் செயல்படுவார் எனவும் கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் விஜய் (Vijay) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அரசியல் அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையன் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், செங்கோட்டையன் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்தார். அப்போது பேசிய அவர் நான் மதிக்கக் கூடிய செங்கோட்டையன் அதிமுகவில் இணைந்துள்ளார். நானும் தவெகவில் இணையவுள்ளதாக சமூக வலைதலங்களில் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, இன்று, நாளை என எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான். செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருக்க மாட்டேன். புலிக்கு வாலாக இருப்பதே பெருமை. ஆனால் எலிக்கு தலையாக இருக்க கூடாது. அதிமுக தான் புலி. எலி என யாரா சொல்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும் என்றார்.

இதையும் படிக்க : தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி? விஜய் அதிகாரபூர்வ அறிவிப்பு

‘விஜய்யிடம் மக்கள் சக்தி உள்ளது’

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை விட்டு விஜய் வந்திருக்கிறார். புனித ஆட்சியை தமிழகத்தில் இடம் பெற அவர் கிளம்பியுள்ளார். அந்த வழியில் நானும் செல்கிறேன். விஜய்யிடம் மக்கள் சக்தி உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவில் பணியாற்றுவேன். விஜய்யை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் எங்கள் பயணம் அமையும். என்னை வரவேற்ற தவெக தொண்டர்களுக்கு நன்றி.

மக்கள் நலனுக்கான விஜயின் சேவை தொடரும். வருகிற 2026 ஆம் ஆண்டு, தேர்தலில் வெற்றி பெற்று நேர்மையான, புனிதமான ஆட்சியை விஜய் தருவார். எவ்வளவு தடைகள் வந்தாலும் மக்கள் சக்தியின் உதவியுடன் விஜய் முதல்வராவார் என்றார்.

இதையும் படிக்க : விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. பரபரக்கும் பனையூர்!!

இந்த நிலையில் செங்கோட்டையன் ஜெயலலிதாவின் படம் வைத்தது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், அது குறித்தும் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர்,  யார் படத்தையும் வைத்துக்கொள்ளலாம் என்றளவில் தவெகவில் ஜனநாயகம் உள்ளது. நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டுவான் என்று அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்.