Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் செங்கோட்டையன். இதில், 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணைந்தனர். அதோடு, அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமாவும் அவருடன் தவெகவில் இணைந்தார். அவர்களுக்கு விஜய் உறுப்பினர் அட்டை வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார்.

“செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”..  நயினார் நாகேந்திரன் பளீர்!
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்.
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Nov 2025 15:34 PM IST

நெல்லை, நவம்பர் 27: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,  அதிமுகவுக்கு என்று தனியாக வாக்குவங்கி இருப்பதாகவும், செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். மேலும், இதனால் அதிமுகபாஜக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்த செங்கோட்டையனை அக்கட்சியில் இருந்து நீக்கியது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவே என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதோடு, தனிப்பட்ட முறையில் செங்ககோட்டையனுக்கும் இது பின்னடைவாக இருந்தாலும், தவெகவுக்கு இந்த நிகழ்வு பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: ‘அண்ணன் செங்கோட்டையன்’.. வரவேற்பு தெரிவித்து விஜய் வீடியோ வெளியீடு!

அதிமுகவில் சலசலப்பு இயல்பே:

இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 1977ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்து வந்தவர் செங்கோட்டையன். ஒருமுறை மட்டும் அவர் எம்எல்ஏவாக இல்லை. தொடர்ந்து, அமைச்சராகவும் பதவி வகித்து பல்வேறு பணிகளை செய்துள்ளார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அவர் இருந்த காலத்தில் அதிமுகவில் இருந்து மட்டுமே அந்த பதவிகளை வகித்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னும் அதிமுக இரண்டாக பிரிந்தது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இருந்தது.

அதன்பின், அவை ஒருங்கிணைந்து இரட்டை இலை சின்னம் பெற்று, தொடர்ந்து 2016 வரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். பின் 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் 4 ஆண்டுகால முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இதையும் படிக்க : அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

அதிமுக – பாஜகவுக்கு பாதிப்பு இல்லை:

இந்த காலக்கட்டத்தில் அதிமுகவில் இருந்த செங்கோட்டையன், தவெகவில் இணைந்துள்ளார். ஆனால், அதிமுக என்பது எப்போதும் தனக்கென வாக்குவங்கி கொண்டுள்ள கட்சியாகும். அதில், யார் இருந்தாலும், அந்த வாக்கு அவர்களுக்கு வந்து சேரும். அவர்கள் வேறு கட்சிக்கு சென்றால், அந்த வாக்குவங்கி அப்படியே சென்றுசேருமா? என்பது தெரியாது. அது ஒரு கேள்விக்குறியே என்றும் தேர்தலுக்கு பின்பு தான் அதன் பலம், பலவீனம் தெரியவரும் என்று கூறினார். இதனால், அதிமுகபாஜக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறிய அவர், தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னணியில் பாஜக இல்லை:

அதோடு, செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததற்கு பின்னால் பாஜக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி, இருந்திருந்தால் அவர் பாஜகவிலேயே இணைந்திருப்பார் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தம்பி விஜய் ஒரு கவுன்சிலர் ஆகவில்லை, எடுத்த உடனே உலகத்தையே தாண்டுவேன் என்று சொன்னால் எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதோடு, தேர்தலில் நின்று உங்கள் செல்வாக்கை காட்டிவிட்டு பேசுங்கள் என்றும் அவர் கேட்டுகொண்டார்.