Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“நான் அடிக்கடி கட்சி மாறுபவன் அல்ல”.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேச்சு!

தவெகவில் இணைந்தது ஏன்? என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். அதில், திமுகவும், அதிமுகவும் வேறுவேறு அல்ல, ஒன்றாகத்தான் பயணிக்கின்றனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு, 2 பெரிய கட்சிகள் இருந்தாலும் மூன்றாவது கட்சி வருவது தேசிய அரசியலிலேயே உள்ளது என ஆம் ஆத்மியை சுட்டிகாட்டி அவர் பேசியுள்ளார்.

“நான் அடிக்கடி கட்சி மாறுபவன் அல்ல”.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேச்சு!
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Nov 2025 13:58 PM IST

சென்னை, நவம்பர் 27: 50 ஆண்டுகாலம் அதிமுகவில் உழைத்ததற்கு எடப்பாடி பழனிசாமி எனக்கு கொடுத்த பரிசுதான் அடிப்படை உறுப்பினர் பதவி பறிப்பு என தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று குரலெழுப்பி வந்த செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.  தொடர்ந்து, அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில், 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பயணித்த அவரை, எடப்பாடி பழனிசாமி எந்தவித காரணமும் கேட்காமல் ஒரேநாளில் கட்சியில் இருந்து நீக்கினார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் முன்வைத்து வந்தார். அதோடு, தனது நீக்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தவெகவில் இணைந்துள்ளார்.

இதையும் படிக்க: ‘அண்ணன் செங்கோட்டையன்’.. வரவேற்பு தெரிவித்து விஜய் வீடியோ வெளியீடு!

பரபரப்பான பனையூர் தவெக அலுவலகம்:

கடந்த 4 நாட்களாக செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அந்தவகையில், இன்று காலை முதலே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செங்கோட்டையனின் ஆதராளர்கள் திரண்டனர். இதற்காக, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து தனிப்பேருந்துகள் மூலம் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டனர். குறிப்பாக அவரது ஆதரவாளாரன முன்னாள் அதிமுக எம்.பி சத்தியபாமாவும் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார். இதையொட்டி, பனையூர் பகுதியே இன்று பரபரப்பாக காணப்பட்டது.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்:

தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து விஜய் வரவேற்பு தெரிவித்தார். அதோடு, கட்சியின் உறுப்பினர் அட்டையையும் வழங்கி, அவருக்கு கட்சித் துண்டையும் அணிவித்தார். அவருடன் இணைந்த அவரது ஆதரவாளரும், அதிமுக முன்னாள் எம்.பியுமான சத்தியபாமாவிற்கும் அவர் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து, அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுக்கு வரவேற்பு தெரிவித்து, அவர்களுடன் விஜய் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

‘அண்ணன்’ எனக் கூறி விஜய் வெளியிட்ட வீடியோ:

இதனிடையே, செங்கோட்டையனை வரவேற்று விஜய் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இன்று அவரது அரசியல் அனுபவத்தையும், அவரது அரசியல் களப்பணியையும் நமது தவெகவிற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் அவருக்கும், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதோடு, 20 வயது இருக்கும்போதே புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நம்பி அவரது கட்சியில் இணைந்தவர் என்றும், அந்த சின்ன வயதிலேயே எம்எல்ஏ என்னும் பொறுப்பை ஏற்றவர் எனவும் புகழ்ந்து பேசியிருந்தார்.

திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல:

இதைத்தொடர்ந்து, தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் உடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தவெகவில் நான் இணைந்ததற்கு காரணங்கள் உண்டு. திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல; ஒன்றாக இணைந்து பயணிக்கிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்

அதோடு, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா வழியில் தான் பயணம் மேற்கொண்டு வந்ததாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலச்சூழலில் பல்வேறு கூறுகளாக அதிமுக பிரிந்ததாகவும், பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் தாங்கள் வலியுறுத்தி வந்ததாகவும், அந்த கருத்துகள் பரிமாறப்பட்டதை தவிர செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் வேதனை வெளிப்படுத்தினார்.

இதையும் படிக்க: “செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!

அடிக்கடி கட்சி மாறுபவன் அல்ல:

மேலும் பேசிய அவர், “பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம், ”அப்பா, அம்மா, விஜய்க்கு ஓட்டு அளியுங்கள்” என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. தூய்மையான ஆட்சி நடத்த ஒருவர் தேவை என்பது மக்கள் மனதில் தோன்றியுள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார்என்று புகழ்ந்து கூறினார். அதோடு, அமைச்சர் சேகர்பாவுவை தான் சந்திக்கவே இல்லை என்றும், திமுகவில் இருந்தோ, பாஜகவில் இருந்தோ யாரும் தன்னை அணுகவில்லை என்று விளக்கமளித்த அவர், தினம் ஒரு கட்சிக்கு செல்பவன் தான் அல்ல எனவும் புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.