AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: +2 மாணவியுடன் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!

3 ஆண்டுகளாக +2 படிக்கும் மாணவியை காதலித்து வந்த இளைஞர், பெற்றோர் காதலை ஏற்காததால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். முதலில் மாணவியை கழுத்தறுத்த அவர், பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால், மயக்கம் மட்டுமே அடைந்த மாணவி, சற்றுநேரத்தில் கண் விழித்துள்ளார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: +2 மாணவியுடன் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!
மாதிரிப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Nov 2025 07:44 AM IST

கரூர், நவம்பர் 30: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், காதலியான +2 மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. அதில், ஷாலினி என்ற +2 மாணவியை, முனிராஜ் என்ற இளைஞர் நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். தனது காதலை பலமுறை மாணவியிடம் கூறியும், அதனை அவர் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், மாணவி பள்ளி செல்லும்போது பின்தொடர்ந்து சென்று அவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அதேபோன்ற காதல் விவகாரத்தில் +2 மாணவியுடன், இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கள்ளக்காதலுக்கு தடையாக மாறிய கணவன்.. காதலனுடன் இணைந்து கொலை செய்த மனைவி!

மூன்று ஆண்டுகளாக காதல்:

கரூர் அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (26) மின் தொழிலாளி. இவர், அதேப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் விவகாரம் சமீபத்தில் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மாணவியை கண்டித்த அவர்கள், காதலை ஏற்கவும் மறுத்து வந்துள்ளனர்.

மனவிரக்தி அடைந்த காதலர்கள்:

இந்நிலையில், நேற்று காலை மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றதை பயன்படுத்தி, வசந்தகுமார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இருவரும் தனியாக சில நேரம் பேசிக் கொண்டிருந்த போது, பெற்றோர் காதலை ஏற்கவில்லை என்ற காரணத்தால் மன விரக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்:

தொடர்ந்து, வசந்தகுமார் முதலில் மாணவியின் கழுத்தை கூர்மையான பொருளால் அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மாணவி மயங்கியதை பார்த்த அவர், இறந்துவிட்டதாக தவறாக எண்ணியுள்ளார். தொடர்ந்து, தானும் மாணவியின் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிக்க : முதலிரவுக்கு மறுத்த மனைவி.. புதுமாப்பிள்ளை வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!

மயக்கம் மட்டுமே அடைந்த மாணவி:

இதனிடையே, சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த மாணவி, வசந்தகுமார் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்து அருகிலிருந்தோரிடம் உதவி கோரினார். பின்னர், கிராம மக்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதோடு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்த மாணவியும் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

Follow Us