AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்

Two Private Buses Collide : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணித்த 25 பயணிகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்
தனியார் பேருந்துகள் மோதி கோர விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Oct 2026 20:10 PM IST

தஞ்சாவூர், அக். 1 : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தில் பயணித்த 25 பயணிகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் வந்து மீட்பு பணிகளுக்கு உதவினர்.

தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்துக்கும் சென்ற தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இதில் கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2026 ஜூன் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தானி பகுதியில் ஏற்கனவே ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்கடந்த 2026, ஜூன் பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு விளக்கம்!

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து னர். விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த செப்டம்பர் 6, 2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் வேளாங்கண்ணிக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 18 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை புதிய பைபாஸ் நால்ரோடு அருகே அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி 50 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க : சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணி குண்டர் சட்டத்தில் கைது

இதில், பேருந்தில் பயணம் செய்த 18 பேர்கள் படுகாயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் இனியவன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்த பகுதியில் விபத்துகள் தொடர்கதையாகி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us