AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்.. வீ த லீடர்ஸ் அண்ணாமலை!

We The Leaders Founder Annamalai : தமிழகத்தில் மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்றும், தற்போது அரசியல் குறித்து பேசாமல் சமுதாய பணிகளை மேற்கொண்டு வருவதாக வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்.. வீ த லீடர்ஸ் அண்ணாமலை!
அண்ணாமலை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Oct 2026 19:00 PM IST

தமிழகத்தில் மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீ த லீடர்ஸ் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை மாதம் போதை இல்லா தமிழகம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தூய்மையான மற்றும் நிலையான தமிழகம் என்ற நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நமது சமூக பணிகளின் தொடர்ச்சியாக தற்போது, அக்டோபர் மாதம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது மட்டும் இன்றி, தங்களிடம் இருக்கும் திறமைகளை உணர்ந்து, கல்வி பயின்று, பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற வேண்டும். அத்துடன் உடல் மற்றும் மன நலத்துடன் வாழ்ந்து தங்களுடைய உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதிலும், சமூகத்தின் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் சமமான பங்களிப்பை வழங்கக்கூடிய மற்றும் உருவாக்கக்கூடியதே இந்த மாதத்தில் மேற்கொள்ள இருக்கும் பணிகளின் முக்கிய நோக்கம் ஆகும்.

பெண்கள் பாதுகாப்பு, மனநலம் குறித்து பேசுவோம்

இந்த அக்டோபர் மாதத்தில் பெண்களின் பாதுகாப்பு, மனநலம், உடல் நலம், பொருளாதார சுதந்திரம், நீதி, கல்வி, அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் பேசுவோம். அத்துடன், தற்போதைய நிலையில் பெண்கள் இன்றும் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் காண்போம். அவற்றுக்கான நடைமுறை தீர்வுகளை பற்றி விவாதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தவும் வேண்டும்.

மேலும் படிக்க: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் Party Fund.. உத்தமர் வேஷம் போடும் விஜய் எங்கே?.. ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்!

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்

பெண்களுக்கான பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும். மாற்றம் என்பது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் சமத்துவமான புதிய தமிழகம் பிறக்கட்டும். அரசியல் பேசுவதற்கு காலம் உள்ளது அரசியலை கொஞ்சம் தள்ளி வைத்து சமுதாயப் பணிகளை எடுத்துள்ளோம். வீ த லீடர்ஸ் அரசியல் அமைப்பாக மாறும்போது பரப்புரை இன்றி தேர்தலில் நிற்கும் சூழல் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் போக்சோ வழக்குகள் அதிகரிப்பு

மக்கள் கையில் அதிகாரத்தை கொடுத்து விட்டு நாம் வேட்பாளராக களத்தில் இறங்க வேண்டும். அரசியல் கட்சியினர் தங்களுக்கு 1 கோடி, 2 கோடி தொண்டர்கள் என்பார்கள். அந்த விளையாட்டுக்குநான் போகவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 26 ஆயிரத்து 145 வழக்குகள் நடந்துள்ளன. 2020- ஆம் ஆண்டு 2,221- ஆக இருந்த போக்சோ வழக்குகள் 2024- ஆம் ஆண்டில் 21,639- ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெக மா.செ.வுக்கு என் மனைவியுடன் தொடர்பு.. கதறும் கணவன்.. திருப்பி அடித்த மனைவி.. திருவள்ளூரில் பரபரப்பு!

Follow Us