AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டீ கடையில் முதல்வர் விஜய்.. மதுராந்தகத்தில் வேறு பாணியில் வாக்கு சேகரிப்பு.. என்ன காரணம்!

TVK Leader Vijay Campaign : முதல்வர் விஜய் வழக்கமாக மேற்கொள்ளும் பிரச்சார பாணியை மாற்றி மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து புதுவித பாணியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அது ஏன். இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

டீ கடையில் முதல்வர் விஜய்.. மதுராந்தகத்தில் வேறு பாணியில் வாக்கு சேகரிப்பு.. என்ன காரணம்!
வேறு பாணியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Oct 2026 16:48 PM IST

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தவெக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், மதுராந்தகத்தில் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 2- ஆம் தேதி) தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சாலை வழியாக ரோடு ஷோ மேற்கொண்ட முதல்வர் விஜய் அந்தப் பகுதியில் உள்ள டீ கடை முன்பு தனது பிரசார திடீரென நிறுத்தினார். உடனே, தனது வாகனத்தில் இருந்து இறங்கிய முதல்வர் விஜய் டீ கடைக்குள் நுழைந்தார். அங்கு, இருந்த பொதுமக்கள் மத்தியில் முதல்வர் விஜய் டீ அருந்தியவாறு பேசிக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

டிராக்டர் ஓட்டியவாறு வாக்கு சேகரித்த முதல்வர்

முதல்வரின் இத்தகைய செயலை அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் சற்று வியப்புடன் பார்த்தனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய் சற்று தொலைவில் உள்ள வயல்வெளியில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்துடன், டிராக்டர் ஓட்டிச் சென்று உழுதும் வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வுகள் முதல்வர் வழக்கமாக மேற்கொள்ளும் பிரச்சார பாணியில் இருந்து சற்று மாறுபட்டதாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, தனது பிரச்சார வாகனத்தில் நின்றவாறும், பிரச்சார வாகனத்திலேயே ரோடு ஷோ நடத்தியவாரும், சைக்கிளில் சென்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார்.

மேலும் படிக்க: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் Party Fund.. உத்தமர் வேஷம் போடும் விஜய் எங்கே?.. ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்!

மாற்று பிரசார பாணியில் முதல்வர் விஜய்

ஆனால், தற்போது அதற்கு மாறாக டீ கடையில் மக்கள் மத்தியில் டீ அருந்தியவாரும், வயல்வெளியில் நடந்த வாரும் வாக்கு சேகரித்தது சற்று வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு இருக்கும் மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை கரைக்கும் வகையில் விஜய் இத்தகைய பிரச்சார பாணியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தவெக வேட்பாளர் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி தீவிர வாய் தகராறு ஈடுபட்டு வந்தனர்.

அடிமட்டத்துக்கு இறங்கிய முதல்வர் விஜய்

இது தவெக தலைமைக்கு சென்றது. அத்துடன், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலும் இது தொடர்பாக தவெக தலைமை மற்றும் முதல்வர் விஜய்க்கு தெரியப்படுத்தியுள்ளாராம். அதற்கு, தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்று தவெக தலைமை தெரிவித்திருந்ததாம். அதன் அடிப்படையிலேயே, முதல்வர் ஜோசப் விஜய் அடிமட்டத்துக்கு இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: கூட்டணி ஆதரவின்றி திமுகவால் 10 தொகுதி ஜெயிக்க முடியுமா? மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா காட்டம்!

Follow Us