AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எட்டயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை!

Thoothukudi Omni Bus Lorry Accident : தூத்துக்குடி மாவட்டத்தில் பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பேருந்து தண்ணீர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எட்டயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பாய்ந்த ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. 6 பேருக்கு தீவிர சிகிச்சை!
விபத்தி் சிக்கிய லாரி- ஆம்னி பஸ்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Oct 2026 16:05 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து தினந்தோறும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்தனது, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சாலையில் சென்ற போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின் பகுதியில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி மற்றும் லாரியின் பின்பகுதி பலத்த சேதம் அடைந்தது. பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் பலரும் பலத்த காயம் அடைந்து அலறல் சத்தம் போட்டனர். உடனே, அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒரு பலி- 6 பயணிகள் பலத்த காயம்

அத்துடன் இந்த விபத்து தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், சுமார் 7 பயணிகள் பலத்த காயத்துடன் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 6 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அங்கு, அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக விபத்து நடந்த இடத்தில் சேதம் அடைந்து கிடந்த லாரி மற்றும் பேருந்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்து ஒட்டுநரை கைது செய்து விசாரணை

போக்குவரத்து போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், பேருந்தின் ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: போளூரில் பெருஞ்சோகம்.. கிணறு தோண்டியபோது மண் சரிந்து விபத்து.. இருவர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழப்பு!

Follow Us