பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?
Physics Nobel Prize 2026 : ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தை உருவாக்கியதிலும், பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டறிந்ததிலும் ஆற்றிய முக்கியப் பங்களிப்புக்காக பிரான்சிஸ் ஹால்சன் என்பவருக்கு 2026 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்படும் என ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அக்டோபர் 6, 2026 இன்று அறிவித்தது. ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அவர் ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புக்காகவும், விண்வெளியிலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காகவும் இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. இந்த 2026 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசை அவர் தனி ஒருவராகப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நோபல் பரிசு வென்றவர்கள் வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். நோபல் பரிசு வென்றவர்களுக்கு அதற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த 2026 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.11.5 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திருச்சி டூ யாழ்ப்பாணம் விமான சேவை.. 45 நிமிட பயணம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா!




யார் இந்த பிரான்சிஸ் ஹால்சன்?
கடந்த 1944 மார்ச் 23 அன்று பிறந்த ஹால்சன், பெல்ஜியத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹால்சனd, கே.யூ. லூவன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், விண்வெளியிலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காகவும் அவருக்கு இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது.
பிரபஞ்சத்தில் அதிகம் காணப்படும் நியூட்ரினோக்கள் எந்தப் பொருளுடனும் எளிதில் வினைபுரிவதில்லை. ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நம் உடலையும் பூமியையும் ஊடுருவிச் செல்கின்றன, ஆனாலும் நம்மால் உணர முடிவதில்லை. இதனால்தான் இவை ‘பேய்த் துகள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றைக் கண்டறிவது இயற்பியலின் மிகக் கடினமான சவால் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தென் துருவத்தில் உள்ள பனிக்கட்டியைப் பயன்படுத்தி நியூட்ரினோக்களைப் பின்தொடர முடியும் என்பதை ஹால்சன் கண்டுபடித்தார்.
அவரது தொலைநோக்குப் பார்வையின் காரணமாக ஐஸ்கியூப் ஆய்வகம் உருவாக அடிப்படையாக அமைந்தன. அதாவது பனிகட்டியையே ஒரு பிரம்மாண்ட துகள் கண்டறியும் கருவியாக மாற்றினார். தென் துருவத்துக்கு அருகே சுமார் 1.5 கிலோமீட்டர் ஆழப் பனிக்கட்டிக்குக் கீழே இந்த ஆய்வகம் இயங்குகிறது. தொடக்கத்தில், அண்டார்டிகாவின் நடுவே இவ்வளவு பெரிய நியூட்ரினோ கண்டறியும் கருவியை அமைப்பது வெறும் ஒரு சுவாரசியமான யோசனையாக மட்டுமே பார்க்கப்பட்டது என ஹால்சனே குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. இலங்கைக்கு ரூ.75 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கடத்த முயற்சி.. ஒருவர் அதிரடி கைது!
இதற்கிடையில் ஐஸ்க்யூப் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 14 ஆண்டுகால தரவுகளைப் பயன்படுத்தி, அதிக ஆற்றல் கொண்ட வானியல் நியூட்ரினோக்களின் மூலங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், பிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு, நியூட்ரினோ வானியலுக்கான மிக உயர்ந்த உலகளாவிய அங்கீகாரமாகத் திகழ்கிறது.