AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sigma: ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்திற்கு கிடைத்தது சென்சார்.. படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?

Sigma Movie Censor Certificate: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சந்தீப் கிஷன். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் சிக்மா. தற்போது இப்படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Sigma: ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்திற்கு கிடைத்தது சென்சார்.. படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்?
ஜேசன் சஞ்சயின் சிக்மாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Sep 2026 14:59 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் சிக்மா (Sigma). இதை இயக்குநர் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்கியுள்ளார். தமிழக முதல்வர் விஜய்யின் (CM Vijay) மூத்த மகனான இவர் முதல் முறையாக தமிழில் இயக்கியுள்ள படம்தான் சிக்மா. இந்த படத்தின் மூலமாக தமிழில் இவர் இயக்குநராக நுழைந்திருக்கும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. சந்தீப் கிஷன் மற்றும் ஜேசன் சஞ்சயின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக உருவாகியுள்ளது. அந்த விதத்தில் இப்படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகும் நிலையில், சென்சார் அப்டேட்டை குறித்து படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 20-வது திருமண நாளை அப்படி கொண்டாட காரணம் என்ன? சூர்யா சொன்ன விளக்கம்

ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷனின் சிக்மா படத்தின் சென்சார் அப்டேட்:

இந்த சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் தமிழ் பிரபலங்கள் மற்றும் தெலுங்கு பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். சுலோச்சனா என்ற பாடலுக்கு நடிகை கேத்ரின் தெரேசா சிறப்பு நடனமாடியிருந்தார்.

இதையும் படிங்க: என்னப்பா இது..? ஒருவருக்கொருவராக மோதிக்கொள்ளும் அஸ்மிதா – சாவன்யா வேலு!

மேலும் ஜேசன் சஞ்சயும் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ 16+ என்ற சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளது. அதனால இந்த படத்தை 16 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்மா திரைப்படத்தின் சென்சார் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த சிக்மா படமானது பணக் கொள்ளை மற்றும் எமோஷனலான கதைக்களம் குறித்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தீப் கிஷனின் வேடம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us