AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் சீன் படம் தீபாவளிக்கு ரிலீஸாக இதுதான் காரணமா? வைரலாகும் தகவல்

Actor Suriyas Scene Movie Release Update | நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இந்தப் படத்தின் வெளியீடு தீபாவளி பண்டிகைக்கு முடிவு செய்ததன் காரணம் என்பதன் தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் சீன் படம் தீபாவளிக்கு ரிலீஸாக இதுதான் காரணமா? வைரலாகும் தகவல்
சீன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2026 17:14 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் சூர்யாவின் சினிமா கெரியரில் அதிக வசூலைப் பெற்ற படமாக கருப்பு படம் சாதனைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சூரியாவிற்கு இந்த 2026-ம் ஆண்டு ஒரு ஹாட்ரிக் வெற்றியாண்டாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சீன். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி உள்ளது. மேலும் இறுதியாக ஜித்து மாதவன் இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான ஆவேஷம் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது போல இந்த சீன் படமும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சீன் படம் தீபாவளிக்கு ரிலீஸாக இதுதான் காரணமா?

மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் மூன்று மாதம் கூட இடைவெளி இல்லாத நிலையில் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இணையத்தில் வெளியான தகவலில் ஆரம்பத்தில் சூர்யா, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் சீன் படங்களுக்கு இடையே ஒரு இடைவெளி விட்டு, டிசம்பர் 2026-ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், டிசம்பர் மாதத்திலேயே ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் வகையில், சீன் படத்தை தீபாவளி 2026-க்கு மாற்றுமாறு நெட்ஃபிளிக்ஸ் அவரை சம்மதிக்க வைத்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ப்ளடி ஸ்வீட்… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது தளபதி விஜயின் லியோ படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மேக்கிங் வீடியோவை வெளியிட்டது பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு – வைரலாகும் வீடியோ

Follow Us