AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு.. தாக்குதலுக்கு காரணம் என்ன?

Tiger Shroff Attack: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் டைகர் ஷெராஃப். இன்று (18/10/2026) மும்பையில் இவரின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சுமார் 5 முறை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரியவந்துள்ளது. தற்போது இதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு.. தாக்குதலுக்கு காரணம் என்ன?
நடிகர் டைகர் ஷெராஃப்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Oct 2026 21:37 PM IST

இந்தி சினிமாவில் ஸ்டார் நட்சத்திர நாயகனாகவும், மக்கள் மத்தில் நல்ல நடனமாடுபவராகவும் பிரபலமானவர் டைகர் ஷெராஃப் (Tiger Shroff). இவர் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் (Jackie Shroff) மகன் ஆவார். அந்த வகையில் இன்று (18/10/2026) மும்பையின் (Mumbai) ஜூஹூவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாலிவுட் நட்சத்திர நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், திடீரென நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மும்பை ஜூஹூவில் உள்ள ஜேவிபிடி மைதானத்திற்கு அருகே நடிகரின் கார் சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்துள்ளதாம். ​​

தாக்குதல் நடத்தியவர்கள் சுமார் ஐந்து முதல் ஏழு சுற்றுகள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.இந்தச் சம்பவத்தில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநருடன் ஒரு ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நடந்தபோது டைகர் ஷெராஃபும் காரில் இருந்தபோதிலும், அவர் காயமின்றி முழுமையாகத் தப்பித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஏரோபிளேன்.. சூர்யாவின் சீன் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டைகர் ஷெராஃப் பாதுகாப்பாக உள்ளாரா?:

இந்த துப்பாக்கி சொத்தில் டைகர் ஷெராஃப் எந்தக் காயமும் ஏற்படவில்லை. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து மும்பை காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: எனது இறுதி மூச்சுள்ள வரைக்கும்.. இணையத்தில் வைரலாகும் ஜோதிகா – சூர்யாவின் திருமண வீடியோ!

அந்த அறிக்கையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜூஹு காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததாகவும், டைகர் ஷெராஃப் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

டைகர் ஷெராஃப் தாக்குதலின் பின்னணி என்ன?:

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்த தாக்குதல் குறித்து பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் காரணத்தையும் கூறியுள்ளனர். டைகர் ஷெராஃப்பை அழைத்து விஷயங்களை விளக்கினோம், ஆனால் அவருக்குப் புரியவில்லை. அதனால் இன்று நாங்கள் அதை அவருக்குத் தெளிவாக விளக்கினோம். மும்பை திரையுலகில் எங்கள் பேச்சைக் கேட்காதவர்கள் அல்லது சல்மான் கானுடன் பணிபுரிபவர்கள் யாராக இருந்தாலும், அடுத்து அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என அந்த தாக்குதல் கும்பல் தெரிவித்துள்ளது. தற்போது இது தொடர்பான தகவல் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow Us