AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suriya: ஏரோபிளேன்.. சூர்யாவின் சீன் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Scene Movie Second Single: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா. இவரின் நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்தான் சீன். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது.

Suriya: ஏரோபிளேன்.. சூர்யாவின் சீன் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சீன் திரைப்பட இரண்டாவது பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Oct 2026 20:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா (Suriya). இவரின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்திலும் உருவாகியுள்ள புதிய படம்தான் சீன் (Scene). இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்துள்ளார். இந்த படத்தை ஆவேசம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகாவின் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த படமானது ஆரம்பத்தில் சூர்யா 47 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை தொடர்ந்து சீன் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமானது திரில்லர் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில், ஆத்தி இவ யார்ரா என்ற பாடலானது வெளியாகியிருந்தது. தற்போது இந்த பாடலை தொடர்ந்து, “ஏரோபிளேன்” (Aeroplane) என்ற 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டள்ளது.

இதையும் படிங்க: எனது இறுதி மூச்சுள்ள வரைக்கும்.. இணையத்தில் வைரலாகும் ஜோதிகா – சூர்யாவின் திருமண வீடியோ!

சூர்யாவின் சீன் படத்தின் 2வது பாடல் ரிலீஸ்:

சூர்யாவின் இந்த சீன் படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா லீட் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், இன்பராஜ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு மலையாள பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமை இசையமைத்துள்ள நிலையில், 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சீன படத்தின் 2வது பாடலான ஏரோபிளேன் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியில் மாலை 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் ஓம் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த சீன் படமானது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதியில் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில் இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us