AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Om Movie: தனுஷின் ஓம் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

Om Movie Second Single: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள படம்தான் ஓம். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், 2வது பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Om Movie: தனுஷின் ஓம் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!
வீழா வீரன் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Oct 2026 19:55 PM IST

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் புதிய திரைப்படம்தான் ஓம் (Om Movie). இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், தனுஷின் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மம்முட்டி (Mammootty) மற்றும் சாய் பல்லவி (Sai Pallavi) இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது செம்மரக் கடத்தல் மற்றும் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளாராக சாய் அபயங்கர் (Sai Abhyankkar) பணியாற்றிவரும் நிலையில், ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகியிருந்தது.

அந்த விதத்தில் தற்போது 2வது சிங்கிள் “வீழா வீரா” பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தின் நியூ ரிலீஸ் தேதி இதுதான் – வெளியானது அப்டேட்

தனுஷின் ஓம் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்:

தனுஷின் ஓம் படத்தின் இரண்டாவது பாடலானாது எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஓம் படத்தின் 2வது பாடல் வீழா வீரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாடலானது 2026ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜயின் இந்த சூப்பர் ஹிட் படங்களுக்கு இசை தேனிசை தென்றல் தேவாதான் – தெரியுமா உங்களுக்கு?

தனுஷின் ஓம் திரைப்படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

தனுஷின் ஓம் படமானது திரில்லர் மற்றும் கடத்தல் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு அப்பாவாக மம்முட்டி நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இருவரும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us