புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Tips To Buy New Smartphone | ஸ்மார்ட்போன் மனிதர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட்போன் (Smartphone) மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஆனால், பலரும் ஸ்மார்ட்போன் வாங்குவதில் தவறு செய்கின்றனர். ஏதேனும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமானாலோ அல்லது ஏதேனும் ஒரு ஸ்மார்ட்போன் மிகவும் பிரபலமாக இருந்தாலோ அதனை வாங்கி விடுகின்றனர். இவ்வாறு செய்யாமல், தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்போன் வாங்குவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டியவை
ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு உங்களுக்கு என்ன தேவை உள்ளது என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, போன் கால், குறுஞ்செய்தி, பிரவுசிங் உள்ளிட்ட வேலைகளை மட்டும் செய்ய உங்களுக்கு ஸ்மார்ட்போன் தேவை என்றால் நீங்கள் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனையே வாங்கலாம். உங்களுக்கு அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன் தேவைப்படாது. நல்ல செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன் போதுமானதாக இருக்கும்.
இதையும் படிங்க : ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!
புகைப்படம் எடுப்பது, கேமிங் அல்லது ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் நபராக இருந்தால் நீங்கள் சிறந்த கேமரா அம்சம், ஸ்டோரேஜ் உடன் கூடிய உயர் ரக மாடல் ஸ்மார்ட்போனை வாங்கலாம். இதுவே நீங்கள் அடிக்கடி பயணம் செய்ய வேண்டும், வீடியோ கால் பேச வேண்டும் என்றால் சிறந்த கேமரா மற்றும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
குறைந்த ஆயுட்காலம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்களின் ஆயுட்காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே இருக்கும். இதுவும் முறையாக பராமரித்தால் மட்டுமே சாத்தியம். தற்போது அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் கீழே விழுந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் தான் வடிவமைக்கப்படுகின்றன. இந்த நிலையில், நீங்கள் ஸ்மார்ட்போனை எப்படி பயன்படுத்துகீறீர்கள் என்பது அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும்.
இதையும் படிங்க : இனி WhatsApp Web-லும் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. வந்தது அசத்தல் அம்சம்!
நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை ரூ.60,000 செலுத்தி வாங்குகிறீர்கள் என்றால் அதன் மதிப்பு அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே ரூ.10,000 ஆக குறைந்துவிடும். எப்படியும் 5 ஆண்டுகளுக்கு பிறகு புது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ள நிலையில், தேவைக்கு ஏற்ப குறைவான பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.