AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!

AI Chatbots For Dinner Dates | காதலர் தினம் உலக அளவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், நீயூயார்க் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது டின்னர் டேட்டுக்கு ஏஐ சாட்பார்களை அழைத்து வரலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Feb 2026 23:44 PM IST

நியூயார்க், பிப்ரவரி 14 : உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14, 2026) காதலர் தினம் (Lover’s Day) கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு காஃபி ஷாப்கள் மற்றும் பேன்சி உணவகங்களில் காதலர்கள் டேபிள் புக் செய்து தங்களது காதலர் தினத்தை கொண்டாடுவர். இதற்காக பல்வேறு உணவகங்கள் பல வித்தியாசமான நடைமுறைகளை மேற்கொண்டுள்ள நிலையில், நியூயார்க்கில் (New York) உள்ள ஒரு உணவகம் மிகவும் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் அப்படி என்ன அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள் – உணவகம்

காதலர் தினத்தன்று காதலர்கள் டின்னர் டேட் செல்லும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உணவகம் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, காதலர் தினத்தை முன்னிட்டு ஏஐ சாட்பாட்களை (AI Chatbots) டின்னர் டேட்டுக்கு அழைத்து வரலாம் என கூறப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஹெல்ஸ் கிட்சனில் உள்ள சேம் சேம் வைன் பார் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : இனி பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படாது.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்!

டின்னர் டேட்டுக்கு வரும் நபர்கள் தங்களுக்கு எதிரே டேபிளில் தங்களது ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் ஏஐ சாட்பாட்களுடன் உரையாடலாம், நேரத்தை செலவிடலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு அந்த உணவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Follow Us