AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பட்டாசுகளால் கடுமையான காற்று மாசு – உலகின் அதிக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்!

Chennai Diwali Air Pollution : தீபாவளி திருநாளை முன்னிட்டு உலகெங்கும் மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக கூறப்படும் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பட்டாசுகளால் கடுமையான காற்று மாசு – உலகின் அதிக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Nov 2026 21:52 PM IST

சென்னை, நவம்பர் 8 : தீபாவளி திருநாளை முன்னிட்டு உலகெங்கும் மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசு (Diwali Firecrackers) வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக கூறப்படும் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நவம்பர் 8, 2026 அன்று இரவு 8 மணி நிலவரப்படி சென்னையின் காற்றின் தர குறியீடு 907 புள்ளிகளாக உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக அளவில் காற்று மாசடைந்த நகரங்களின் தரவரிசையில் சென்னை முதலிடத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்!

தமிழகம் முழுவதும் நவம்பர் 8, 2026 தீபாவளி திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும்பட்டாசுகளை வெடித்தும் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிலையில் சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதாகத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க : ‘மேகதாது அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை’ – முதல்வர் விஜய்க்கு கர்நாடகா முதல்வர் பதில்

குறிப்பாக, மாலை நேரத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டமாக காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையின் காற்றுத் தரக் குறியீடு சில மணி நேரங்களிலேயே மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வரும் நிலையில், காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 238 ஆக காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. மணலியில் 168, கொடுங்கையூரில் 166, பெருங்குடியில் 175, அரும்பாக்கத்தில் 162 ஆக காற்றின் தரக் குறியீடு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு இடையில் சர்வதேச காற்றுத் தர கண்காணிப்பு வெளியிட்ட தகவல்களின்படி, உலகின் அதிக காற்று மாசடைந்த நகரங்களுக்கான பட்டியலில் சென்னை முதலிடத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இரவு 8 மணி நிலவரப்படி சென்னையின் காற்றுத் தரக் குறியீடு 907 புள்ளிகளாகப் பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது காற்றின் தரம் மிகவும் மோசமடைந்திருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

காற்றுத் தரக் குறியீடு என்பது காற்றில் உள்ள மாசுத் துகள்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பொதுவாக, காற்றுத் தரக் குறியீட்டின் மதிப்பு அதிகரிக்கும்போது காற்று மாசுபாட்டின் தீவிரமும் அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், வெவ்வேறு காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்புகள் வெவ்வேறு அளவீட்டு முறைகளைப் பயன்படுத்துவதால், அவற்றின் மதிப்புகள் மாறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : முதல்வர் விஜய்க்காக புனித மெக்காவில் மொட்டை அடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா

தமிழக அரசு தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால் பல இடங்களில் தீபாவளி நாள் தொடங்கிய நள்ளிரவில் இருந்தே பல்வேறு இடங்களில் மக்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

Follow Us