AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?

5ஜி நெட்வொர்க்கால் பலர் தங்கள் போனின் பேட்டரி முன்பைவிட வேகமாக குறைந்து வருவதாக கூறுகின்றனர். குறிப்பாக 4ஜி நெட்வொர்க்குடன் ஒப்பிடும்போது 5ஜி அதிக பேட்டரி பவரை எடுத்துக்கொள்கிறது. இந்த பிரச்னைக்கான காரணம் மற்றும் இதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா? எப்படி தவிர்ப்பது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 May 2026 19:55 PM IST

இந்தியாவில் 5ஜி சேவை நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி இணைப்பை வழங்கி வருகின்றன. இந்த 5ஜி சேவையினால் அதிவேக இண்டர்நெட், தடையற்ற வீடியோ ஸ்டிரீமிங், ஆன்லைன் கேமிங் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் இவ்வளவு நன்மைகள் இருந்துcd 5ஜி நெட்வொர்க்கால் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகமாக எதிர்கொள்ளும் ஒரு சவால் பேட்டரி விரைவாக தீர்வதுதான்.

ஏன் 5ஜியால் போன் பேட்டரி வேகமாக காலியாகுது தெரியுமா?

5ஜி நெட்வொர்க்கால் பலர் தங்கள் போனின் பேட்டரி முன்பைவிட வேகமாக குறைந்து வருவதாக கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக 5ஜி நெட்வொர்க் செயல்பாடு இருப்பதாக தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 4ஜி நெட்வொர்க்குடன் ஒப்பிடும்போது 5ஜி அதிக பேட்டரி பவரை எடுத்துக்கொள்கிறது. 5ஜி மூலம் அதிக அளவு டேட்டா மிக வேகமாக பரிமாறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனின் பிராசஸர் மற்றும் நெட்வொர்க் சிப் அதிகமாக செயல்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக பேட்டரி பயன்பாடும் அதிகரிக்கிறது.

இதையும் படிக்க : இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அமலுக்கு வந்தது கட்டண முறை.. வாட்ஸ்அப் பிளஸின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

மேலும், ஸ்மார்ட்போன் பின்னணியில் இயங்கும் செயலிகளும் பேட்டரி விரைவில் காலியவதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. நீங்கள் பயணிக்கும் போது அல்லது 5ஜி சிக்னல் சரியாக கிடைக்காத பகுதிகளில் உங்கள் போன் தொடர்ந்து 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு இடையே மாறிக்கொண்டே இருக்கும். இப்படி நெட்வொர்க் மாறியபடி இருப்பது நம் ஸ்மார்ட்போன் பேட்டரி விரைவில் காலியாகி வருகிறது.

குறிப்பாக நெடுஞ்சாலைகள், கிராமப்புறங்கள், சிக்னல் பலவீனமாக உள்ள இடங்கள் ஆகிய பகுதிகளில் இந்த பிரச்னை அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பயணிப்பவர்கள் தங்களுடன் பவர் பேங்க எடுத்து செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இதையும் படிக்க : சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு வழங்கும் இலவச கோர்ஸ்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

பேட்டரியை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

  • பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் Adaptive Battery என்ற வசதி உள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்முறையை கண்காணித்து அதற்கேற்ப பேட்டரியின் பயன்பாட்டை மாற்றிக்கொள்ளும்.
  • பேட்டரியில் பவர் குறைவாக இருக்கும் போது, அல்லது பயணங்களின் போது Battery Saver Mode என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் பின்னணியில் இயங்கும் செயலிகள் கட்டுப்படுத்தப்படும்
  • தேவையில்லாத நேரம் மொபைல் டேட்டாவை நிறுத்தி வைக்கலாம். இதனால் பேட்டரி பவர் விரைவில் காலியாகாது. குறிப்பாக சிக்னல் பலவீனமாக இருக்கும் இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • உங்கள் பகுதியில் 5ஜி சிக்னல் நிலையாக இல்லாவிட்டால், நெட்வொர்க் செட்டிங் பகுதியில் சென்று 4ஜி ஆப்சனுக்கு மாறலாம். இதனால் 4ஜி மற்றும் 5ஜி இடையேயான தொடர்ச்சியான மாறுதல் தவிர்க்கப்பட்டு பேட்டரி ஆயுள் அதிகரிக்கும்.

Follow Us