ஜூன் மாதம் முதல் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு?.. ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்!
Recharge Plans Prices Expected To Hike | 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான விலையை உயர்த்தின. இந்த நிலையில், மீண்டும் 2026 ஜூன் மாதத்தில் இந்த நிறுவனங்கள் விலை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு (Telecommunication) துறையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (Private Telecommunication Companies) தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதல் இடத்தில் உள்ள நிலையில், ஏர்டெல் (Airtel) நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுதவிர வி (VI) உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அதிக அளவிலான மக்கள் இந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையை பெற்று வரும் நிலையில், அவை முக்கிய இடங்களை பிடித்துள்ளன.
2024 ஆம் ஆண்டு ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்களை உயர்த்தி நிறுவனங்கள்
பெறும்பாலான பொதுமக்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையை நம்பியுள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் (Recharge Schemes) விலையை உயர்த்தின. இந்த நிறுவனங்கள் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டனங்களை உயர்த்திய நிலையில், அது பயனர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பலரும் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல்-க்கு (BSNL – Bharat Sanchar Nigam Limited) தங்களது இணைப்பை மாற்றினர். இந்த நிலையில், தனியார் தொலைத்தொடர்பு மீண்டு விலை உயர்த்தும் முயற்சியில் இரங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : Redmi Note 15 5G : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி நோட் 15 5ஜி.. அதுவும் பட்ஜெட் விலையில்!
மீண்டும் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்து நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டு ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான விலைகளை உயர்த்திய நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதாவது ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 15 சதவீதம் வரை ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெஃப்ரீஸ் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஏஐ மூலம் டூர் பிளான் பண்ணுறீங்களா?.. இந்த சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிடலாம்!
அதில் 2026 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குள்ளாக இந்தியாவில் மொபைல் ரீச்சார்ஜ் கட்டணங்கள் 15 சதவீதம் வரை உயரும் என கூறப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் ஐபிஓ தொடங்கியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது, பொதுமக்கள் 5ஜி சேவையை நாடுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.