AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுதந்திர தினம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த வழிகளில் பயணிக்கலாம்?

Chennai Traffic Diversions Announcement : சுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் பல்வே று இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போ லீசார் தெரிவித்துள்ளனர். அவை என்னென்ன இடங்கள் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

சுதந்திர தினம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த வழிகளில் பயணிக்கலாம்?
சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Aug 2026 17:05 PM IST

இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் முதல்வர் விஜய் முதல் முறையாக கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக, பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றவர்கள் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை- அண்ணா சாலை- முத்து பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனைக்கு சென்றடையலாம்.

பாரி முனை செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம்

பாரி முனையில் இருந்து ராஜாஜி சாலை- தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர்- வடக்கு கோட்டை பக்கசாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு- முத்துசாமி சாலை- முத்துசாமி பாலம்- அண்ணா சாலை- வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் சென்றடையலாம். அண்ணா சாலை பகுதியில் இருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு- வடக்கு கோட்டை பக்கசாலை வழியாக பாரிமுனைக்கு செல்லலாம்.

மேலும் படிக்க: “தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும்”.. சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!!

எந்தெந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்

இதே போல, முத்துசாமி பாலத்தில் இருந்து கொடிமர சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை- வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம். சிவப்பு மற்றும் பர்பிள் கலர் வாகன அனுமதி அட்டை பெற்றவர்கள் காலை 8:30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயில் அருகே இறங்கி வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்துமடத்தில் நிறுத்த வேண்டும்.

அனுமதி அட்டை பெற்றவர்களுக்கான அறிவிப்பு

மேலும், 8:30 மணிக்கு பின்னர் போர் நினைவு சின்னம், கொடிமர சாலை முத்துசாமி பாலம்- முத்துசாமி ரோடு- வடக்கு கோட்டை பக்க சாலை- பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வாங்கிய சுரங்க பாதை வழியாக தலைமை செயலாக வெளி வாயிலின் அருகே வாகனங்களை நிறுத்தலாம். நீளம் மற்றும் பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றவர்கள் 8:30 மணி வரை ராஜாஜி சாலை- போர் நினைவு சின்னம் கொடிமர சாலை- முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- வடக்கு கோட்டை பக்கசாலை- பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

மேலும் படிக்க: “50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

Follow Us