AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சிபிசிஐடி டிஜிபி யார் தெரியுமா?

Tamil Nadu IPS Officers Transfer : தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில், எந்தெந்த அதிகாரிகள் எந்தெந்த பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சிபிசிஐடி டிஜிபி யார் தெரியுமா?
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Aug 2026 20:17 PM IST

தமிழகத்தில் காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழர்கள் காவல்துறையில் 10 ஐ. பி. எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் ஐ. ஏ. எஸ். உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில்,

மேலும் படிக்க: சுதந்திர தினம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த வழிகளில் பயணிக்கலாம்?

  • சி. பி. சி. ஐ. டி. டி. ஜி. பி- ஆக இருந்த அபின் தினேஷ் மோடக் மாற்றம் செய்யப்பட்டு பாலநாகதேவி ஐ. பி. எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சைபர் கிரைம் ஏ. டி. ஜி. பி. ஆக இருந்த பால நாகதேவி மாற்றம் செய்யப்பட்டு அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பொருளாதார குற்றப்பிரிவு ஏ. டி. ஜி. பி- ஆக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கியூ பிரான்ச் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி. கே. அரவிந்த் ஐ. பி. எஸ். மாற்றம் செய்யப்பட்டு ராமமூர்த்தி ஐ. பி. எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த மயில்வாகனன் ஐ. பி. எஸ். மாற்றம் செய்யப்பட்டு பி. கே. அரவிந்த் ஐ. பி. எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெருநகர சென்னை அண்ணாநகர் உதவி ஆணையராக இருந்த ஈஸ்வரன் ஐ. பி. எஸ். மாற்றப்பட்டு அர்பிதா ராஜ்புத் ஐ. பி. எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
  • தமிழ்நாடு கமாண்டோ படையின் உதவி ஆணையராக ஈஸ்வரன் ஐ. பி. எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழு காவல் கண்காணிப்பாளராக எஸ். ஆர். செந்தில்குமார் ஐ. பி. எஸ். நியமனம்.
  • தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த டி. ரமேஷ் பாபு மாற்றம் செய்யப்பட்டு வி. சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி நகர துணை ஆணையராக டி. ரமேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
B711baa4 Af3d 4890 9081 D49a93f246b6

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

புதிய பணியிடங்களில் இணையும் அதிகாரிகள்

தமிழக காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணி புரிந்து வந்த 10 மூத்த ஐ. பி. எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகள் விரைவில் தங்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் விரைவில் இணைவர் என்று கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பழனி நில மோசடி.. சிக்கலில் சஸ்பெண்ட் சார்-பதிவாளர்.. அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!

Follow Us