AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஏரியிலிருந்து மண் திருட்டு.. அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு!”.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அதிரடி புகார்.. லஞ்ச ஒழிப்புத் துறையில் முறையீடு!

EV Velu Corruption Case: திமுக வடமண்டல இளைஞரணி மாநாட்டிற்காகப் பொதுமக்களுக்குச் சொந்தமான மலப்பாம்பாடி ஏரியிலிருந்து 45 லட்சம் கன அடி மண் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“ஏரியிலிருந்து மண் திருட்டு.. அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு!”.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அதிரடி புகார்.. லஞ்ச ஒழிப்புத் துறையில் முறையீடு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 13 Aug 2026 13:47 PM IST

சென்னை, ஆகஸ்ட் 13: திமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு மற்றும் அவரது மகன் ஈ.வி.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் வடமண்டல இளைஞரணி மாநாட்டை நடத்துவதற்காக, அவருக்குச் சொந்தமான தனியார் நிலத்தைச் சமப்படுத்தும் நோக்கில் அருகில் உள்ள அரசு ஏரியிலிருந்து பல லட்சம் கன அடி மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிகார பலத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலால் அரசுக்கு சுமார் 8 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வழங்கப்பட்டுள்ள இந்த புகார், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் திமுக தலைமைக்குள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!

மாநாட்டு நிலமும் மண் திருட்டு விவகாரமும்:

திமுகவின் வடமண்டல ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய எ.வ.வேலு, கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்தார். இந்த மாநாட்டிற்காக, திருவண்ணாமலை பகுதியில் எ.வ.வேலுவின் மகன் ஈ.வி.குமரனுக்குச் சொந்தமான అరుణை பிராடக்ஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட 124 ஏக்கர் ‘கலைஞர் திடல்’ நிலம் தேர்வு செய்யப்பட்டது. மாநாடு நடத்துவதற்காக அந்த நிலத்தைச் சமப்படுத்தும் பொருட்டு, அருகில் உள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலப்பாம்பாடி ஏரியிலிருந்து எந்தவித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக மண் திருடப்பட்டதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு ரூ.8 கோடி நிதி இழப்பு:

சட்டப்படி விவசாய அல்லது குடும்பத் தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் 1 மீட்டர் ஆழம் வரை மட்டுமே டாப் லேயர் மண் எடுக்க முடியும் என்ற சூழலில், வணிக ரீதியிலான மாநாட்டுத் தேவைகளுக்காக விதிமுறைகளை மீறி 4 மீட்டர் ஆழம் வரை அடிமண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஏரியின் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சட்டவிரோத அகழ்வாராய்ச்சியால் கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி முறை மண் அள்ளப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பின்படி கணக்கிட்டால், அரசுக்குக் குறைந்தபட்சம் 8 கோடி ரூபாய்க்கு மேல் நேரடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேரில் ஆய்வு செய்த புகார்தாரர் விரிவாக விளக்கியுள்ளார்.

பணப் பரிவர்த்தனைச் சந்தேகம்:

இந்த 124 ஏக்கர் நிலமானது 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து ரூ.46 கோடி வழிகாட்டி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதியின் தற்போதைய சந்தை நிலவரப்படி ஒரு சென்ட் நிலம் 1.5 லட்சத்திற்கும் மேல் விற்கப்படுவதால், இந்த நிலத்தின் உண்மையான சந்தை மதிப்பு ரூ.200 கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த வேலுவின் குடும்பத்தினர், அதே துறையின் ஒப்பந்ததாரரிடம் இருந்து நிலம் வாங்கியதில் முறைகேடான பணப் பரிவர்த்தனைகளும் கருப்புப் பணப் புழக்கமும் இருக்கக் கூடும் என்பதால் இதுகுறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைக்கான கோரிக்கை:

இது வெறும் மாநாட்டு ஏற்பாடு மட்டுமல்லாமல், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் மாநாடு என்ற பெயரில் சொந்த நிலத்தை இலவசமாகச் சமப்படுத்தி உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொண்ட நேரடி ஊழல் என்று புகாரில் சாடப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளூர் தாசில்தார் மற்றும் ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது நிலத்தின் ஆவணங்கள், லாரிகள் மூலம் மண் அள்ளப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஏரி தோண்டப்பட்டதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்பூர்வ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us