சென்னை 28 பாகம் 3 படத்தின் அப்டேட் என்ன? வைரலாகும் புது தகவல்
Chennai 28 Part 3 movie update viral on social media | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகராகவே அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பலப் படங்களில் நடித்தார். சிலப் படங்களில் நாயகனாகவும் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் நடிப்பு வாழ்க்கையை விட இயக்குநராக அவர் தனது சினிமா பயணத்தை தொடங்கிய போதே தொடர்ந்து அவர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் சென்னை 28. இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மிகவும் ஜாலியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படமாக இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்தடுத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதே போல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.




சென்னை 28 பாகம் 3 படத்தின் அப்டேட் என்ன?
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 28’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தாய்லாந்தில் நடைபெற்று வருகின்றன. அந்த பாய்ஸ் மீண்டும் களமிறங்குகிறார்கள். முதல் பாகம் சென்னையில் அமைந்திருந்தது. இரண்டாம் பாகத்தில் அவர்கள் ஒரு கிராமத்திற்குப் பயணம் மேற்கொண்டனர். இப்போது மூன்றாம் பாகத்தில் தாய்லாந்து எனும் சர்வதேசக் களத்திற்குச் செல்கிறார்கள்.
அங்கும் கிரிக்கெட் பின்னணியுடன் கூடிய நிறைய வேடிக்கை, நகைச்சுவை மற்றும் புதிய மோதல்கள் காத்திருக்கின்றன. வெங்கட் பிரபுவுக்கே உரித்தான பாணியில், முழுமையான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இது அமையவுள்ளது. இப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் இலங்கையில் நிறைவடைந்துவிட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… கோலிவுட் சினிமாவில் வரிசைக்கட்டும் தெய்வீகப் படங்கள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #Chennai28 Part 3 location scouting is happening in Thailand 🇹🇭 by #VenkatPrabhu. The Boys Are Back! 🏏💥 The 1st part happened in Chennai, the 2nd part saw the boys travel to a village, and in the 3rd part, they’re heading to the international arena in Thailand 🇹🇭, where… pic.twitter.com/jc3Obbaj9w
— Movies Singapore (@MoviesSingapore) July 13, 2026
Also Read… படங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லை – நடிகர் கார்த்தி