9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. செப்டம்பர் 22 ஆம் தேதி வரை தொடரும் மழை.. எங்கெல்லாம்?
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16, 2026: தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நிலவில் கோவை ஆகிய மாவட்டங்களில் நல்ல கனமழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக செப்டம்பர் 16ஆம் தேதி நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:
செப்டம்பர் 17ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதன் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்புமனு தாக்கலில் பாமக ஆப்செண்ட்.. கூட்டணியில் விரிசலா?
செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:
அதைப்போல, செப்டம்பர் 19ஆம் தேதி நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஏனைய வடதமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகளும், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க: விஜய் சேதுபதி விவகாரம்: பொதுவான கருத்துக்கு தவெகவினர் கொந்தளிப்பது ஏன்?.. சீமான் சரமாரி கேள்வி!!
செப்டம்பர் 20ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகக்கூடும் என்பதன் காரணமாக மஞ்சள் எச்சரிக்கையும், ஏனைய வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 21 மற்றும் 22ஆம் தேதிகளைப் பொறுத்தவரையில், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் மாலை/இரவு நேரங்களில் தொடரும் மழை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், தொடர்ந்து இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.