AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2 தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்புமனு தாக்கலில் பாமக ஆப்செண்ட்.. கூட்டணியில் விரிசலா?

PMK Absent During ADMK Candidate K மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வில் பாமக நிர்வாகிகள் யாரும் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற நிலையில், பாமக தலைமையின் உத்தரவு வராததால் புறக்கணித்ததாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்புமனு தாக்கலில் பாமக ஆப்செண்ட்.. கூட்டணியில் விரிசலா?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Sep 2026 13:56 PM IST

செங்கல்பட்டு, செப்டம்பர் 16: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிதா சம்பத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான பாஜக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் நேரில் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இருப்பினும், இத்தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பாமக சார்பில் மாநில அல்லது மாவட்ட அளவிலான எந்தவொரு நிர்வாகியும் பங்கேற்காதது தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!

வேட்புமனு தாக்கலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு:

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத், தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி (BJP), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK), இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) போன்ற கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாக வந்து வேட்பாளருடன் இணைந்து மனுத்தாக்கலில் பங்கேற்றனர். ஆனால், அந்த கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின்| சார்பில் பிரதிநிதிகள் எவரும் வரவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

பாமக நிர்வாகிகள் வராததன் பின்னணி என்ன?

அதிமுக வேட்புமனு தாக்கலில் பாமக நிர்வாகிகள் பங்கேற்காதது குறித்து பாமக மாவட்ட வட்டாரங்களில் கேட்கப்பட்டபோது, அதிமுக தரப்பில் இருந்து தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டனரருப்பினும், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பது குறித்தோ அல்லது இந்த நிகழ்வில் பங்கேற்பது குறித்தோ பாமக தலைமையிடமிருந்து (அன்புமணி ராமதாஸ் / ராமதாஸ்) எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது உத்தரவாதமோ தங்களுக்கு வரவில்லை எனத் தெரிவித்தனர். இதன் காரணமாகவே வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்வதைத் தவிர்த்ததாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதையும் படிக்க: மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. க்யூ ஆர் கோடுடன் வாகன நிறுத்துமிடம்!

நேரில் சந்திக்காத அதிமுக தலைமை:

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், அதிமுக தரப்பில் பாஜக, அமமுக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரப்பட்டது. ஆனால், இதுவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையோ அல்லது பாமகவின் பிற மூத்த நிர்வாகிகளையோ அதிமுக தலைமை நேரில் சந்தித்து முறைப்படி ஆதரவு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு செல்வாக்குமிக்க வாக்கு வங்கி இருக்கும் நிலையில், கடந்த தேர்தல்களில் அதிமுக-பாமக கூட்டணி இணைந்தே வெற்றியை சாத்தியமாக்கியது. இத்தகைய சூழலில், பாமக தலைமையின் இந்த மௌனமும் புறக்கணிப்பும் அதிமுகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா அல்லது பாமக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறதா என்ற பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Follow Us