AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை போகப்போறீங்களா? பக்தர்களுக்காக பறந்து வந்த தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!

Madurai Meenakshi Temple: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் பயண வசதிக்காக சென்னை தாம்பரம் மற்றும் மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மதுரை போகப்போறீங்களா? பக்தர்களுக்காக பறந்து வந்த தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!
கோப்புப்படம் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Sep 2026 13:07 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 அன்று மகா குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆன்மீக விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக தாம்பரம் – மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 16 மாலை 5.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06159), மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு மதுரையைச் சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையிலிருந்து செப்டம்பர் 17 பிற்பகல் 2.00 மணிக்கு புறப்படும் ரயில் (06160), இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்தப் பயணத்தின் போது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம் ஆகிய முக்கிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும். மேலும் அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய நிலையங்களிலும் பயணிகள் ஏறி இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை தென் மாவட்ட மற்றும் சென்னைவாழ் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா சிறப்பு ரயில் சேவை

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த ஆன்மீக நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், தடங்கலற்ற பயணத்தை உறுதி செய்யவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தாம்பரம் – மதுரை இடையிலான இந்தச் சிறப்பு ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களின் இயக்க நேரம் மற்றும் மார்க்கம்

ரயில்வே அறிவிப்பின்படி, தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06159), மறுநாள் செப்டம்பர் 17 அதிகாலை 2.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை அடையும். அதேபோல மறுமார்க்கத்தில், மதுரையிலிருந்து செப்டம்பர் 17-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06160), அன்றைய தினம் இரவு 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: மதுரையில் குவியும் பக்தர்கள்: கும்பாபிஷேக நாளில் சித்திரை வீதிக்குள் செல்ல யாருக்கு அனுமதி?

பயணிகள் பயன்பெறும் முக்கிய நிறுத்தங்கள்

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எளிய முறையில் ஏறி இறங்குவதற்கு வசதியாக இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகின்றன. அதன்படி, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் ஆகிய முக்கிய சந்திப்புகளில் இந்த ரயில் நின்று செல்லும். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சிரமமின்றி மதுரையைச் சென்றடைய இந்த சிறப்பு ரயில் சேவை பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us