AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“முதலீடா.. சுற்றுப்பயணமா?”.. முதல்வர் விஜய்யின் லண்டன் ட்ரிப்.. வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்!!

Nainar Nagendran Slams CM Vijay: தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கானது அல்ல என விமர்சித்துள்ளார். மேலும், புதிய தலைமை செயலகம் அமைப்பது தொடர்பான திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்புகள் இடிப்பு விவகாரம் குறித்தும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

“முதலீடா.. சுற்றுப்பயணமா?”.. முதல்வர் விஜய்யின் லண்டன் ட்ரிப்.. வறுத்தெடுத்த நயினார் நாகேந்திரன்!!
நயினார் நாகேந்திரன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Sep 2026 12:55 PM IST

சென்னை, செப்டம்பர் 16: தமிழ்நாடு அரசியலில் நாளுக்கு நாள் பல புதிய திருப்பங்களும் காரசாரமான விவாதங்களும் மேலெழுந்து வருகின்றன. குறிப்பாக, அரசின் புதிய திட்டங்கள், நிர்வாக முடிவுகள் மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை எதிர்க்கட்சிகளின் தீவிர கண்காணிப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகின்றன. அந்த வகையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் சென்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பயணத்தின் உண்மைத் தன்மை குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலமைச்சரின் லண்டன் பயணம், புதிய தலைமைச் செயலகத் திட்டம் மற்றும் பட்டினப்பாக்கம் மீனவர்களின் நிலை குறித்து விரிவாகப் பேசினார்.

இதையும் படிக்க: “ஆதரவு தொடர்ந்தாலும்.. தவெகவின் பல நடவடிக்கைகளில் உடன்பாடில்லை”.. சிபிஎம் பகிரங்க அறிவிப்பு!!

தொழில் முதலீடா? சுற்றுலாப் பயணமா?

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், அவர் எதற்காக லண்டன் சென்றுள்ளார் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இதுவரை அரசு தரப்பில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். தொழில் முதலீடுகளை ஈர்க்கவே இந்த பயணம் என்று கூறப்பட்டாலும், தொழில் முதலீடுகளில் ‘கிரீன்ஃபீல்ட்’ மற்றும் ‘பிரவுன்ஃபீல்ட்’ என இரண்டு வகைகள் உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்டினார். புதிதாகத் தொடங்கப்படும் தொழில்கள் ‘கிரீன்ஃபீல்ட்’ என்றும், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் ‘பிரவுன்ஃபீல்ட்’ என்றும் அழைக்கப்படும்.

தற்போது லண்டனில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ‘இஒய் ஜிடிஎஸ்’ (EY GDS – Global Delivery Services) நிறுவனம் ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வரும் ஒன்றுதான் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். ஏற்கனவே உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதை புதிய முதலீடாகக் கருத முடியாது என்றும், எனவே முதலமைச்சர் புதிய முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்லவில்லை, மாறாக அவர் சுற்றுப்பயணமாக மட்டுமே அங்கு சென்றுள்ளார் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

திட்டமிடல் இல்லாத அறிவிப்பு:

தொடர்ந்து புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என்று தாம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதை நினைவு கூர்ந்தார். இருப்பினும், தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதில் எவ்வித முறைப்பாடும் இல்லை என்று சாடினார். எந்தவொரு இடத்தையும் முறைப்படி முடிவு செய்யாமலும், உரிய வரைபடத் திட்டங்கள் தயாரிக்காமலும், மதிப்பீட்டுச் சான்றிதழ்கள் ஏதும் தயார் செய்யாமலும் எவ்வாறு ரூ.1,200 கோடி என நிதி நிர்ணயம் செய்யப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தற்போது இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.2,000 கோடி என அதிகரித்து பேசப்பட்டு வருவதாகவும், தெளிவான திட்டமிடல் இன்றி தொகையை மட்டும் உயர்த்திச் சொல்வது என்ன மாதிரியான நிர்வாக முறை எனத் தெரியவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் சாடினார்.

இதையும் படிக்க: மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!

சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு:

இறுதியாக, பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்திற்காக மீனவர்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் நடித்த ‘சுறா’ படத்தில் மீனவர்களைக் காப்பாற்றுவது போல நடித்திருந்தார் என்று குறிப்பிட்டுக் காட்டினார். ஆனால், நிஜ வாழ்க்கையில் தற்போது மீனவர்களின் வீடுகளை இடிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்து இருப்பது முற்றிலும் கண்டனத்திற்குரியது என்று அவர் வேதனை தெரிவித்தார். திரைப்படத்தில் காட்டுவது போல இல்லாமல், நிஜத்திலும் மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புதிய தலைமைச் செயலகத்திற்கான இடத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us