AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. வெடவெடுத்து போன மருத்துவர்கள்- செவிலியர்கள்.. அடுத்த நடந்த ட்விஸ்ட்!

Tambaram Govt Hospital : சென்னையில் தன்னை கடித்த பாம்பை கையில் எடுத்துக் கொண்டு தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நபரால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கையில் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. வெடவெடுத்து போன மருத்துவர்கள்- செவிலியர்கள்.. அடுத்த நடந்த ட்விஸ்ட்!
கையில் பாம்புடன் வந்த இளைஞர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Sep 2026 13:51 PM IST

சென்னையில் தன்னை கடித்த பாம்பை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கையோடு கொண்டு வந்த நபரால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலவியது. சென்னை மாவட்டம், தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் மையூர் சாகீக் ( 36 வயது). இவர், இன்று புதன்கிழமை காலை தனது வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருந்த மர பலகைகளை மையூர் அப்புறப்படுத்துவதற்காக அதனை எடுக்க முயன்றார். அப்போது, அதன் அடியில் இருந்த பாம்பு திடீரென சீறிக்கொண்டு எதிர்பாராதவிதமாக அவரது கையை கடித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மையூர் எந்த விதமான பதட்டமும் அடையாமல், தன்னை கடித்த அந்த பாம்பை லாபகமாக பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டுக்கொண்டு, தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விரைந்து சென்றார்.

பாம்பு கொண்டு வந்த காரணத்தால் மலைத்து போன மருத்துவர்கள்

அங்கு, அவர் கையில் பாம்புடன் வருவதை பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, பாம்பு கடித்த சம்பவத்தை மருத்துவரிடம் மையூர் தெரிவித்த நிலையில், உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தொடங்கினர். அப்போது, மருத்துவரிடம், தனக்கு எந்த பாம்பு கடித்தது என்பதை தங்களிடம் காண்பித்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும் வகையிலேயே பாம்பை கையோடு கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதை கேட்டு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சற்று மலைத்துப் போயினர்.

மேலும் படிக்க: செங்கல்பட்டு இளைஞர் கொலை சம்பவம்.. 6 பேரை தட்டி தூக்கிய தனிப்படை போலீசார்..!

பாம்பு கடித்த நபருக்கு தொடர் சிகிச்சை

தொடர்ந்து, மயூரிடம் இருந்து அந்த பிளாஸ்டிக் பாட்டிலை வாங்கி அதில் இருந்த பாம்பை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அதில், அந்த பாம்பு விஷம் இல்லாத சாதாரண பாம்பு என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அந்த இளைஞர் மையூருக்கு தேவையான முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவர் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு

தாம்பரம் பகுதியில் தன்னை கடித்த பாம்பை கையுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளைஞரால் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து, அந்த பாம்பை மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னர், ஊழியர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று அந்த பாம்பை பத்திரமாக விட்டுவிட்டனர்.

மேலும் படிக்க: சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டல்.. தந்தையை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி-மகன்.. சென்னையில் பயங்கரம்!

Follow Us