AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை போனால் இந்த 8 இடங்களில் அசைவ சாப்பாடு சாப்பிட மறக்காதீங்க!

Madurai Food: மதுரை என்றாலே கோயில், கலாசாரம் மட்டுமல்லாமல் அதன் பாரம்பரிய உணவுகளும் நினைவுக்கு வரும். குறிப்பாக அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களிடையே பிரபலமாக இருக்கும் சிறிய உணவகங்களும் மெஸ்களும் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளன. மட்டன், மீன், சிக்கன் உள்ளிட்ட உணவுகளை பாரம்பரிய முறையில் சமைத்து வழங்கும் இந்த இடங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவை உள்ளது.

மதுரை போனால் இந்த 8 இடங்களில் அசைவ சாப்பாடு சாப்பிட மறக்காதீங்க!
மதுரைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 17 Sep 2026 16:00 PM IST

மதுரை கோயில் நகரமாக மட்டுமல்லாமல், பாரம்பரிய அசைவ உணவுகளுக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் மெஸ்கள் மற்றும் உணவகங்களில் மட்டன், மீன், சிக்கன் உள்ளிட்ட உணவுகள் தனித்துவமான உள்ளூர் சுவையில் தயாரிக்கப்படுகின்றன. அம்சவல்லி பவனில் மட்டன் ஈரல் குழம்பு, மூளை வறுவல், கிட்னி குழம்பு மற்றும் மட்டன் சுக்கா போன்றவை பிரபலமாக உள்ளன. சந்திரன் மெஸ்ஸில் அயிரை மீன் குழம்பு, விரால் மீன் வறுவல், நாட்டுக்கோழி சாப்ஸ் மற்றும் மட்டன் கோலா உருண்டை உள்ளிட்ட உணவுகளை சுவைக்கலாம். அம்மா மெஸ்ஸில் அயிரை மீன் குழம்புடன் நண்டு ஆம்லெட், மட்டன் சுக்கா மற்றும் பல்வேறு அசைவ உணவுகள் கிடைக்கின்றன. மணப்பட்டி முருகேசன் மெஸ்ஸின் சீரக சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் பிரியாணியும், குமார் மெஸ், ஸ்ரீ ஜானகிராம் மற்றும் அருமுகம் மெஸ் போன்ற இடங்களின் பாரம்பரிய உணவுகளும் குறிப்பிடத்தக்கவை.

அம்சவல்லி பவன்

காலை நேரத்தில் வயிறு நிறைய அசைவ உணவு சாப்பிட விரும்புபவர்களுக்கு அம்சவல்லி பவன் முக்கியமான தேர்வாக உள்ளது. பல தசாப்தங்களாக இயங்கி வரும் இந்த உணவகத்தில் மட்டன் ஈரல் குழம்பு, மூளை வறுவல், கிட்னி குழம்பு போன்ற உணவுகளுடன் பரோட்டா மற்றும் ஊத்தப்பம் பரிமாறப்படுகிறது. மட்டன் நெஞ்சுக்கறி, மட்டன் சுக்கா ஆகியவையும் இங்கு பிரபலமானவை. உணவுக்குப் பிறகு ஆப்பிள் துண்டுகள் கலந்த இனிப்பான ஆப்பிள் மில்க் அருந்துவது இங்குள்ள தனிச்சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் மெஸ்

மதுரையில் அசைவ உணவுக்காக பிரபலமான மற்றொரு இடம் சந்திரன் மெஸ். அயிரை மீன் குழம்பு, விரால் மீன் வறுவல், மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி சாப்ஸ் ஆகியவை இங்கு முக்கிய உணவுகளாக உள்ளன. குறிப்பாக அயிரை மீன் குழம்பில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பிரத்யேக மசாலா சேர்க்கப்படுவதால் தனித்துவமான சுவை கிடைக்கிறது. மட்டன் கோலா உருண்டையும் இங்கு சுவைக்க வேண்டிய உணவுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

அம்மா மெஸ்

அம்மா மெஸ் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அயிரை மீன் குழம்புதான். இதனுடன் நண்டு ஆம்லெட், முட்டைக் கறி, மட்டன் சுக்கா, நெள்ளி எலும்பு மற்றும் நெஞ்செலும்பு சாப்ஸ் போன்ற உணவுகளும் பிரபலமாக உள்ளன. இங்குள்ள இலைச் சாப்பாட்டில் பலவிதமான காரமான குழம்புகளை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். கோலா உருண்டை மற்றும் மீன் வறுவலும் உணவுப் பிரியர்களால் விரும்பப்படும் உணவுகளாக உள்ளன.

Also Read: 2026-இல் கட்டாயம் பார்க்க வேண்டிய இலங்கையின் 15 அற்புத இடங்கள்!

மணப்பட்டி முருகேசன் மெஸ்

மதுரையின் பாரம்பரிய அசைவ உணவு வரிசையில் ஒப்பீட்டளவில் புதிய இடமாக மணப்பட்டி முருகேசன் மெஸ் உள்ளது. மணப்பட்டி கிராமத்தில் திருமண விழாக்களில் தயாரிக்கப்படும் முறையைப் பின்பற்றி இங்கு பிரியாணி சமைக்கப்படுகிறது. சீரக சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி, திண்டுக்கல் பாணியைவிட சற்று மிதமான காரத்துடனும் செறிவான சுவையுடனும் இருக்கும். எலும்புக் குழம்பு, குடல் குழம்பு மற்றும் மட்டன் நெய் சுக்கா போன்றவையும் இங்கு கிடைக்கின்றன.

மதிய உணவுக்கு மேலும் சில இடங்கள்

மதிய நேர அசைவ உணவுக்கு மதுரையில் இன்னும் சில பாரம்பரிய இடங்களையும் முயற்சி செய்யலாம். குமார் மெஸ்ஸில் கறி தோசை, மட்டன் ஈரல் மற்றும் மூளை வறுவல் பிரபலமாக உள்ளன. ஹோட்டல் ஸ்ரீ ஜானகிராமில் மட்டன் சுக்கா மற்றும் பிரியாணி, அருமுகம் மெஸ்ஸில் பரோட்டா, மிளகுக் குழம்பு மற்றும் கறி தோசை ஆகியவற்றை சுவைக்கலாம். சிம்மக்கல் கோனார் கடையிலும் கறி தோசை முக்கியமான உணவாகக் குறிப்பிடப்படுகிறது.

Follow Us