AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் நுழைகிறதா?”.. கேள்வி எழுப்பிய உதயநிதி.. விளக்கம் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!!

Two Language Policy: உச்ச நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்றும், இருமொழிக் கொள்கையில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகச் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் என்றும் இருமொழிக் கொள்கையே தொடரும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் நுழைகிறதா?”.. கேள்வி எழுப்பிய உதயநிதி.. விளக்கம் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!!
அமைச்சர் ராஜ்மோகன், உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Sep 2026 08:17 AM IST

சென்னை, செப்.19: தமிழ்நாட்டின் மொழி உரிமை மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான விவாதங்கள் எப்போதும் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றன. பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தான் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பின் முதன்மை அடித்தளமாகத் திகழ்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், மாநிலத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் திறப்பது மற்றும் மொழிக் கொள்கை தொடர்பான விவகாரங்கள் மீண்டும் உச்ச நீதிமன்ற விசாரணை மற்றும் அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன. தமிழ்நாட்டின் கல்வி உரிமையிலும் மொழிக் கொள்கையிலும் எந்தவிதக் சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்றும், தேவைப்பட்டால் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டித் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா…? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்

உச்ச நீதிமன்ற விசாரணை பின்னணி:

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா குடியிருப்புப் பள்ளிகளைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்குவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், நில ஒதுக்கீடு குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தியது. இருப்பினும், நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது என அம்மாநிலக் கல்வித் துறை வழக்கறிஞர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. கல்வி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் (Concurrent List) இருப்பதால், மாநிலத்தின் மொழிக் கொள்கை மற்றும் கல்வி உரிமையைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்ற விவாதம் வலுப்பெற்றுள்ளது.

உதயநிதி வெளியிட்ட காரசார அறிக்கை:

இருமொழிக் கொள்கை மற்றும் நவோதயா பள்ளிகள் விவகாரம் குறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் விரிவான அறிக்கையைப் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிற்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பதில் அரசு தீர்க்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஹிந்தி அறிவால் மட்டுமே நாட்டின் தேசப்பற்று தீர்மானிக்கப்படுவதில்லை; இந்தி அறியாத காரணத்தால் தமிழ்நாடு எந்த ஒரு துறையிலும் பின்தங்கிவிடவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையை அனைவரும் ஒன்றிணைந்து நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், நவோதயா பள்ளிகளுக்கு எதிராகத் தேவைப்பட்டால் உடனடியாகச் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, மாநிலத்தின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!

அமைச்சரின் திட்டவட்ட விளக்கம்:

இவ்விவகாரம் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் அன்றும், இன்றும், என்றும் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் தீர்ப்பு கிடையாது, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும் விளக்கமளித்தார். மேலும், “நாங்கள் இந்தி உட்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், தமிழ்நாட்டின் மண்ணுக்கும் மக்களுக்கும் தாய்மொழியான தமிழே முதன்மையானது. தாய்மொழியில் சிந்திப்பதே சிறந்தது என்பதால் இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருக்கிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Follow Us