தீவிர கண்காணிப்பில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு.. உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கா?
MLA VS Babu Health: மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அவரை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அவருக்கு அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் வி.எஸ்.பாபு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 19, 2026: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையில் தொடர் சிகிச்சை:
செப்டம்பர் 9ஆம் தேதி வி.எஸ்.பாபுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வி.எஸ் பாபுவின் அரசியல் பயணம்:
2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
மு.க.ஸ்டாலினை தேர்தலில் தோற்கடித்ததைத் தொடர்ந்து வி.எஸ்.பாபு சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கவனம் பெற்றார். குறிப்பாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் காண்பித்த ஒரு சைகை சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.
மேலும் படிக்க: பாமக ஆதரவு யாருக்கு.. நெத்திப் பொட்டில் அடித்தது போல அறிவித்தார் அன்புமணி ராமதாஸ்!
வி.எஸ்.பாபு ஏற்கனவே 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் இணைந்தார். பின்னர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தீவிர கண்காணிப்பில் கொளத்தூர் எம்.எல்.ஏ:
இந்நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அவரை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அவருக்கு அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் வி.எஸ்.பாபு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை ரிப்போர்ட்
தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தகவல் தமிழக வெற்றிக் கழகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அமைச்சர் என்.ஆனந்த் இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து, அவரை நேரில் பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.