AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடப்பாவமே.. விருதுநகரில் வீட்டின் அருகே விளையாடிய சிறுவன்.. காலடியில் காத்திருந்த எமன்.. பதற வைக்கும் பின்னணி!

Aruppukottai Crime : விருதுநகர் மாவட்டத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பள் ளி மாணவன் எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

அடப்பாவமே.. விருதுநகரில் வீட்டின் அருகே விளையாடிய சிறுவன்.. காலடியில் காத்திருந்த எமன்.. பதற வைக்கும் பின்னணி!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Sep 2026 20:48 PM IST

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள வீராசாமி தெருவை சேர்ந்தவர் செல்வ முருகன். இவரது மகன் ஜெகன் ( ஐந்து வயது). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், சிறுவன் தனது வீட்டின் முன்பு விளையாடுவது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று வீட்டின் அருகே ஜெகன் விளையாடு கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் மின் கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. இதை அறியாத அந்த சிறுவன் விளையாட்டு வாக்கில் அந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.

மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சிறுவன் பலி

உடனடியாக அவர்கள் மற்றும் சிறுவனின் பெற்றோர் உள்ளிட்டோர் சிறுவன் ஜெகனை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: பிரசாதத்தை சாப்பிட்ட வளர்ப்பு நாய்.. ஆத்திரத்தில் மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்.. தஞ்சாவூரில் நிகழ்ந்த வினோத கொலை!

அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் தந்தை புகார்- போலீசார் விசாரணை

மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் சடலத்தை பார்த்து கதறி அழுதது அங்கு இருந்தவர்கள் மத்தியில் கண்களில் கண்ணீரை வரவழைப்பது போன்று ஆனது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் செல்வம் முருகன் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுவன் உயிரிழந்ததால் உறவினர்கள் பெரும் சோகம்

அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் அந்த கிராமம் முழுதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..மாணவிகளிடம் சில்மிஷம்.. திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

Follow Us