AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

10 முதல் 20% தள்ளுபடி – ரேசன் கடையில் ‘வெற்றி’ பிராண்டில் மளிகை பொருட்களை விற்க திட்டம்

Vetri Brand Products : தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரேசன் கடைகளின் மூலம் வெற்றி என்ற பிராண்டின் கீழ் மளிகை பொருட்களை சந்தை விலையை விட 10 முதல் 20 சதவிகிதம் அளவுக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

10 முதல் 20% தள்ளுபடி – ரேசன் கடையில் ‘வெற்றி’ பிராண்டில் மளிகை பொருட்களை விற்க திட்டம்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Sep 2026 19:58 PM IST

சென்னை, செப்டம்பர் 18 : தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரேசன் கடைகளின் மூலம் வெற்றி என்ற பிராண்டின் கீழ் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களை சந்தை விலையை விட 10 முதல் 20 சதவிகிதம் அளவுக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேசன் கடையில் ‘வெற்றி’ பிராண்டில் மளிகை பொருட்களை விற்க திட்டம்

சமீபத்தில் தமிழக அரசு சார்பாக கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் முறை கலைக்கப்பட்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கான பொருட்களை தரமானதாக கொள்முதல் செய்யும் நோக்கில் ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வழக்கமாக சில வியாபாரிகளிடம் இருந்து மட்டுமே பொருட்களை கொள்முதல் செய்யும் நடைமுறைக்கு மாற்றாக, இணையவழி கொள்முதல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா…? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்

இந்த நிலையில் வெற்றி என்ற புதிய பிராண்டை தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பிராண்டை முதல்வர் விஜய் வருகிற 2026, அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்த வெற்றி என்ற பிராண்டின் கீழ் மக்களின் அத்யாவசிய மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதனை ரேசன் கடைகளின் வாயிலாக 10 முதல் 20 சதவிகிதம் தள்ளுபடி விலையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் சந்தை விலையில் இருந்து குறைந்த விலைக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!

மேலும் வெல்லம், பூண்டு, தேங்காய் எண்ணெய், மிளகு, கடுகு, சீரகம், புளி, வெந்தயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் உள்ளிட்ட பொருட்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வெற்றி பிராண்டில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொருட்களை ரேசன் கடைகள் மட்டுமல்லாது, கூட்டுறவு அங்கடிகள் உள்ளிட்ட கூட்டுறவு வற்பனை நிலையங்கள் வாயிலாகவும் மக்கள் வாங்க முடியும் என கூறப்படுகிறது. நியாய விலைக் கடைகள், கூட்டுறவு சிறப்பங்காடிகள் மற்றும் பிற கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்தப் பொருட்களை பொதுமக்கள் வாங்க முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us