Team India: ஆடும் லெவனில் இருந்து சாம்சன் நீக்கப்பட்டது ஏன்..? பயிற்சியாளர் காம்பீர் விளக்கம்!
Gambhir about Samson: முக்கியமான போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனி ஒருவராக இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய விதம், சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தது. இருப்பினும், தொடர்ந்து 3 மோசமான இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, சஞ்சு சாம்சன் இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் (Sanju Samson) தனி ஒருவராக இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்தினார் என்று சொல்வது தவறாக இருக்காது. முக்கியமான போட்டிகளில் சஞ்சு சாம்சன் தனி ஒருவராக இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய விதம், சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தது. இருப்பினும், தொடர்ந்து 3 மோசமான இன்னிங்ஸ்களுக்குப் பிறகு, சஞ்சு சாம்சன் இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பி, 3 போட்டிகளில் 2 அரை சதங்களை அடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.
ALSO READ: டி20 கிரிக்கெட்டில் ரன் மழை.. 9000 ரன்களை கடந்த சஞ்சு சாம்சன்!
சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ஏன்..?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு இங்கிலாந்து தொடரில் இருந்து சாம்சனை நீக்கியது குறித்த முடிவு பற்றி கம்பீர் கூறுகையில், “உலகக் கோப்பையில் எந்த வீரரும் சாதாரணமாக ‘தொடரின் சிறந்த வீரர்’ விருதை கொடுப்பது கிடையாது, அவரிடம் நிச்சயமாகத் திறமை இருக்கிறது. அவர் நிறைய சாதித்துள்ளார்.




அது நிச்சயமாகக் கடினமானதாக இருந்தது. குறிப்பாக, அதற்கு முன்பு அவரது ஆட்டத்திறனைக் கருத்தில் கொள்ளும்போது, அவரை இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்குவது எனது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் நான் எடுத்த மிகக் கடினமான முடிவாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் வீரர்களின் தற்போதைய ஆட்டத்திறனையும் மனதில் கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில், உலகக் கோப்பையின் போது வெற்றி பெற்ற அதே கூட்டணியை மீண்டும் பயன்படுத்த அணி ஏற்கனவே முடிவு செய்தோம். இந்தத் தொடரிலும் உலகக் கோப்பை கூட்டணியையே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் தெளிவாக இருந்தோம். 3 அல்லது 4 போட்டிகளில் சரியாக விளையாட வேண்டும் என்பதற்காக வீரர்கள் பார்மில் இல்லை என்று அர்த்தம் இல்லை” என்றார்.
ALSO READ: சோகத்தில் தோனி ஊர்.. டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழக்கும் ராஞ்சி? காரணம் இதுதான்!
வைபவ் சூர்யவன்ஷி குறித்து கம்பீர் கூறுகையில், “இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். அவரது திறமையையும் ஆற்றலையும் அணி முழுமையாக அறிந்திருக்கிறது. நீண்ட காலமாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களுக்கு இந்திய அணித் தேர்வில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு வீரர், இப்போதுதான் அணியில் சேர்ந்த ஒரு வீரரை விட முன்னுரிமை பெறுவார்” என்றார்.