AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..மாணவிகளிடம் சில்மிஷம்.. திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

Tiruppur Govt School Teacher Arrested : திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பள்ளியின் ஓவிய ஆசிரியரை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..மாணவிகளிடம் சில்மிஷம்.. திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!
போக்சோவில் கைதான ஆசிரியர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Sep 2026 17:31 PM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், கடந்த ஜூன் மாதம் மாணவிகக்கு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவிகளிடம் யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று ஓவிய ஆசிரியர் மதன்குமார் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சமடைந்த அந்த மாணவிகள் இது குறித்து தனது பெற்றோர் உள்ளிட்ட யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனை, தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஓவிய ஆசிரியர் மதன்குமார் தொடர்ந்து அந்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

பள்ளி மாணவிகளுக்கு தொல்லை அளித்த ஓவிய ஆசிரியர்

இதனால், கடும் அதிருப்தி அடைந்த அந்த மாணவிகள் இது தொடர்பாக தனது சக தோழிகளிடம் தெரிவித்துள்ளார். அப்போது, இதனை பெற்றோரிடம் தெரிவிக்குமாறு தோழிகள் தெரிவித்துள்ளது அடுத்து, ஓவிய ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் அந்த மாணவிகள் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க: பிரசாதத்தை சாப்பிட்ட வளர்ப்பு நாய்.. ஆத்திரத்தில் மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்.. தஞ்சாவூரில் நிகழ்ந்த வினோத கொலை!

மாணவிகளிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை

இது தொடர்பாக, போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில்,  மாணவிகளிடம் தனித்தனியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஓவிய ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததை மாணவிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஓவிய ஆசிரியர் மதன்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர் கைது

இதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததை ஓவிய ஆசிரியர் மதன்குமார் ஒத்துக் கொண்டார். இதை தொடர்ந்து, அரசு பள்ளியின் ஆசிரியர் உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஓவிய ஆசிரியர் மதன்குமாரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓவிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

இந்த சம்பவத்தால், ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து ( சஸ்பெண்ட்) மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா…? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்

Follow Us