AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியையை.. பள்ளிக்குள் விட மறுத்த காவலாளி.. பாய்ந்தது வழக்கு!!

இந்த பள்ளியில் வேலை பார்க்கவே இப்பவும் பயமாக இருக்கிறது. மேலாளர் உத்தரவின் பேரில் தான் காவலாளி என்னிடம் கறாராக நடந்து கொண்டார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அந்த காவலாளி நிரந்தர ஊழியர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, போலீசார் மேலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியையை.. பள்ளிக்குள் விட மறுத்த காவலாளி.. பாய்ந்தது வழக்கு!!
தலைமை ஆசிரியையை பள்ளிக்குள் விட மறுத்த காவலாளி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Feb 2026 10:23 AM IST

கேரளா, பிப்ரவரி 07: கேரளாவில் சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியையை காவலாளி பள்ளிக்குள் விட மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த உத்தரவை பிறப்பித்த பள்ளி மேலாளர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி காலையில் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை காவலாளி சஷாங் என்பவர் பள்ளிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை மூடியுள்ளார்.

இதையும் படிங்க: மேகாலயா சுரங்க வெடிவிபத்து.. பிப்.9 ஆம் தேதி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை:

இதனை சற்றும் எதிர்பாராத தலைமை ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். சுடிதார் அணிந்து வந்தால் உள்ளே அனுமதி கிடையாது என மேலாளர் கூறியதாக காவலாளி கூறியுள்ளார். அவருடைய உத்தரவுப்படி தான் செயல்படுகிறேன் என கூற, அடுத்த நொடியே தலைமை ஆசிரியர் கோபத்துடன் போராட்டத்தில் குதித்தார். தொடர்ந்து, அவர் பள்ளியின் கேட் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பியதோடு, கொட்டாக்கதரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மேலாளர் கொடுத்த விளக்கம்:

இதனை தொடர்ந்து, போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி தலைமை ஆசிரியை பள்ளிக்குள் செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில், தலைமை ஆசிரியையை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது என நான் கூறவில்லை என விளக்கமளித்துள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் காவலாளியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வேலை பார்க்கவே பயமாக உள்ளது:

இந்நிலையில், தலைமை ஆசிரியை சிந்து கூறுகையில், இந்த பள்ளியில் வேலை பார்க்கவே இப்பவும் பயமாக இருக்கிறது. மேலாளர் உத்தரவின் பேரில் தான் காவலாளி என்னிடம் கறாராக நடந்து கொண்டார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அந்த காவலாளி நிரந்தர ஊழியர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, போலீசார் மேலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

இதையும் படிங்க: உச்சக்கட்ட கோபத்தில் சூரியன்…இந்தியாவின் செயற்கைகோள்-சிக்னல்கள் பாதிக்க வாய்ப்பு…இஸ்ரோ எச்சரிக்கை!

மேலும் இதுகுறித்து தலைமை ஆசிரியை கூறுகையில், மேலாளர் மீது ஜாமினில் வரக்கூடிய பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். எனவே எனது சட்டப்போராட்டம் தொடரும் என்றார்.

Follow Us