Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை தைப்பூசம் 2026.. விரத முறையும், வழிபாட்டு நேரமும்.. முருக வழிபாட்டின் முழு விவரம்!

Thaipusam 2026: முருகப்பெருமான் உண்மையான கடவுள், அவர் சத்தியமான தெய்வம். அவர் நெருப்புக்கு சமமானவர், அதனால்தான் நெருப்பிலே இருந்து தோன்றி இந்த உலக மக்களுக்கு மிக அழகா ஆனந்தமா அற்புதமான கருணைகளை வாரி வழங்குகிற வள்ளலாக நமக்கு காட்சி தருகின்றார். என்ன கேட்டாலும் தரக்கூடிய வள்ளல் யாருக்கு? சத்தியம் உள்ளவர்களுக்கு.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 31 Jan 2026 14:27 PM IST
தைப்பூசத் திருநாளில் முருகனை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இது மிக எளிய வழிபாடு. குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனக்கவலைகளில் இருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். ஏதாவது கடுமையான நோய் இருக்கு அப்படிங்கறவங்க அந்த நோய் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்து கொண்டு இந்த வழிபாட்டை செய்யலாம்.

1 / 5
இந்த தைப்பூசத்துக்கு காலையிலிருந்து நீங்க உபவாசமாக இருக்கணும். மதியம் முருகனுக்கு நெய்வேத்தியமா சக்கரை பொங்கல் வைக்கலாம், பருப்பு பாயசம் ரொம்ப விசேஷமானது. இன்னைக்கு வள்ளலாரையும் நாம் வழிபட வேண்டிய ஒரு அழகான நாள். வடலூர் வள்ளல் பெருமானார் ஜோதியிலே கலந்த தினமும் இந்த தினம்தான். மதியம் படைக்கிறவங்க வள்ளலாருக்கு பிரியமான தயிர் சாதமும் அப்பமும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம்.

2 / 5
2026ஆம் ஆண்டு தைப்பூசம் வழிபாட்டுக்குரிய நேரம்: பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை. காலை வழிபாடு: 4:30 லிருந்து 6:30 மணிக்குள்ளயும் அல்லது 8:00 மணியிலிருந்து 9:30க்குள்ளயும் செய்து கொள்ளலாம். மதியம்: 1:35 லிருந்து 2:35 மணிக்குள்ளயும் வழிபடலாம். மாலை: 6:00 மணிக்கு மேல் ஒரு விளக்கேத்தி முருகனை வழிபாடு பண்ணி விரதத்தை நிறைவு செய்யுங்க. தீபம் ஏற்றும் போது வள்ளலாரை நினைத்து “அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற தாரக மந்திரத்தை சொல்லுதல் சிறந்த பலனைத் தரும். இந்த புனித நாளில் குறைந்தபட்சம் ஒரு உயிருக்கு அன்னதானம் செய்வது அவசியம். மனிதராக இருந்தாலும், பறவையோ, விலங்கோ - யாருக்காவது உணவளிப்பது இந்த நாளின் முழு அருளை நமக்கு பெற்றுத் தரும்.

3 / 5
முருகப்பெருமான் உண்மையான கடவுள், அவர் சத்தியமான தெய்வம். அவர் நெருப்புக்கு சமமானவர், அதனால்தான் நெருப்பிலே இருந்து தோன்றி இந்த உலக மக்களுக்கு மிக அழகா ஆனந்தமா அற்புதமான கருணைகளை வாரி வழங்குகிற வள்ளலாக நமக்கு காட்சி தருகின்றார். என்ன கேட்டாலும் தரக்கூடிய வள்ளல் யாருக்கு? சத்தியம் உள்ளவர்களுக்கு. அப்போ சத்தியம் அப்படிங்கிற ஒன்ன முருக வழிபாடு அப்படிங்கிறது நமக்கு கற்று தருகிறது. தைப்பூசம், முருகனின் அருளையும், சத்தியத்தின் மகத்துவத்தையும், கருணையின் உயர்வையும் உணர்த்தும் திருநாள். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒன்றே முருகன் அருள் பெற, பக்தியோடு சேர்ந்து சத்தியமும் அவசியம்.

4 / 5
தைப்பூசத்துக்கு அநேகமான கோயில்கள்ல பால்குடம் எடுத்து வழிபாடு செய்றதுங்கிறது ஒரு வழக்கம் இருக்கு. நமக்கு பக்கத்துல ஏதாவது முருகர் கோவில் இருக்குன்னா ஒரு அரை லிட்டர் பால் வாங்கி கொடுங்க அபிஷேகத்துக்கு, அதுவே ரொம்ப விசேஷமானது. வீட்ல முருகர் விக்கிரகம் வச்சிருக்கறீங்க அப்படின்னா பால் அபிஷேகம் செய்து வழிபாடு பண்ணிக்கலாம். மாலை 6:00 மணிக்கு மேல நம்ம விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு விசேஷமா நமக்கு பௌர்ணமியும் வந்துருது, பூச நட்சத்திரமும் ஒண்ணா வந்துருது. அதனால நாள் முழுவதுமே இந்த பூச வழிபாடு அப்படிங்கிறது ரொம்ப ரொம்ப சிறப்பான வழிபாடாக அமையும்.

5 / 5