Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடுத்தர மக்களுக்கு நிம்மதி அளிக்குமா பட்ஜெட் 2026.. எதிர்பார்ப்புகள் என்ன என்ன?

General Public Expectations On Union Budget 2026 | 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புகளை முன்வைத்து வரும் நிலையில், சாமானிய மக்கள் சார்பில் சில எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Jan 2026 16:06 PM IST
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பெட்ஜெட் பிப்ரவரி 01, 2026 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், நடுத்தர வர்க்கத்தினர் இடமிருந்து சில எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

1 / 5
2025, பிப்ரவரி 01 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வரி முறைகள் இந்தியாவில் வரி செலுத்தும் சுமார் 80 சதவீத மக்களுக்கு பலன் அளிக்கும் விதமாக இருந்தது. குறிப்பாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி பூஜியமாக மாற்றப்பட்டது.

2 / 5
வரி விகிதம் குறைவாக இருந்தாலும், சாமானிய மக்களின் வாங்கும் திறனை பாதிக்கக் கூடிய சில சவால்கள் உள்ளன. குறிப்பாக வரி தொடர்பான சட்ட சிக்கல்கள் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க தாமதமாக ரீஃபண்ட் கிடைப்பது வரி செலுத்துவோரின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. 

3 / 5
இந்த நிலையில், பல விதமான வரி விகிதங்களை குறைத்து, எளிமையான முறையை கொண்டு வருவது வருமான வரி தாக்கல் செய்வோருக்கு பெரிய அளவிலான பலனை கொடுக்கும். மேலும் வரி தொடர்பான புகார்களை ஆல்னைன் மூலம் தீர்க்கும் வசதிக்காக டிஜிட்டல் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. 

4 / 5
மனித தலையிடல்கள் இல்லாமல் வருமான வரி ரீஃபண்ட் நேரடியாக வங்கி கணக்கிற்கு வரும்படி செய்வது ரீஃபண்ட் பெறும் முறையை மேலும் எளிமையாமதாக மாற்றும் என்றும், அதன் மூலம் ஏராளமான வரி செலுத்தும் நபர்கள் பலன்களை பெற முடியும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

5 / 5