AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் போட்டி நேரம் மாற்றமா..? முழு விவரம் இங்கே!

India vs Pakistan Cricket Match Time: 2026 பிப்ரவரி 15ம் தேதியான இன்று மொத்தம் 3 டி20 உலகக் கோப்பை போட்டிகள் உள்ளன. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியாகும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான போட்டி மழை காரணமாக நேரம் எதுவும் மாறவில்லை.

India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் போட்டி நேரம் மாற்றமா..? முழு விவரம் இங்கே!
இந்தியா - பாகிஸ்தான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Feb 2026 07:15 AM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) 27வது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் (India vs Pakistan) மோதுகின்றன. இந்த போட்டியானது இலங்கையில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மழை காரணமாக போட்டி நேரம் மாறுமா என்று போட்டிக்காக காத்திருக்கும் பார்வையாளர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எந்த நேரத்தில் தொடங்கும், கொழும்பு ஸ்டேடியத்தின் வானிலை, பிட்ச் ரிப்போர்ட் மற்றும் நேருக்கு நேர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

இந்தியா vs பாகிஸ்தான் நேருக்கு நேர் (T20)

  • மொத்த போட்டிகள் – 16
  • இந்தியா வென்ற போட்டிகள் – 13
  • பாகிஸ்தான் வென்ற போட்டிகள் – 3

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?

2026 பிப்ரவரி 15ம் தேதியான இன்று மொத்தம் 3 டி20 உலகக் கோப்பை போட்டிகள் உள்ளன. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியாகும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான போட்டி மழை காரணமாக நேரம் எதுவும் மாறவில்லை. எனவே போட்டி இரவு 7:00 மணிக்கு தொடங்கும். டாஸ் மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.

பிப்ரவரி 15ல் கொழும்பில் வானிலை எப்படி இருக்கும்?

வானிலை அறிக்கையின்படி, கொழும்பில் 2026 பிப்ரவரி 15ம் தேதியான இன்று நாள் முழுவதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் 20 முதல் 30 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலை 7 மணிக்கு மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், போட்டி நடந்தாலும், மழை அடிக்கடி குறுக்கிடலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரடியாக எங்கே பார்ப்பது?

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். நேரடி ஸ்ட்ரீமிங் ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்திலும் பார்க்கலாம்.

ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

ஆர். பிரேமதாச மைதானத்தில் சிறந்த வடிகால் அமைப்பு இருப்பது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக உள்ளது. எனவே, எவ்வளவு மழை பெய்தாலும் நீர் வேகமாக வடிந்துவிடும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் ஸ்விங் செய்ய வாய்ப்பு உள்ளது. ஆட்டம் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறும்போது ​​பிட்ச் மெதுவாகி, பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் ஷாட்களை பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமாக்குகிறது.

ALSO READ: கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. பிரேமதாச ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எப்படி?

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரின்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

பாகிஸ்தான் அணி:

சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அகா (கேப்டன்), பாபர் ஆசம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.

 

Follow Us