ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் கிஷோரின் மெல்லிசை பட ட்ரெய்லர்
MELLISAI Movie Official Trailer | தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கிஷோர் குமார். இவர் கதையின் நாயகனகா நடித்து தற்போது உருவாகியுள்ள படம் மெல்லிசை. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது
2004-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான காண்டி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் கிஷோர் குமார். இந்தப் படத்தில் நடித்ததற்காக கர்நாடக அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் கிஷோர் குமார். இதனைத் தொடர்ந்து பல கன்னட மொழிப் படங்களில் நடித்த நடிகர் கிஷோர் குமார் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என தொடர்ந்து பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனார். ஒரு வில்லனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்களா என்பது போல அவரது கதாப்பாத்திரம் சிறப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வில்லனாக மட்டும் இன்றி சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறார். இறுதியாக தமிழ் சினிமாவில் ஐபிஎல் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் இறுதியாக வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




நடிகர் கிஷோர் நாயகனாக நடித்த மெல்லிசைப் படம்:
இயக்குநர் திரவ் எழுதி இயக்கி உள்ள படம் மெல்லிசை. இந்தப் படத்தில் நடிகர் கிஷோர் குமார் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சுபத்ரா, ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த், தனன்யா, புரோக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி, ரவி ஏழுமலை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Also Read… ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
A middle-class family life.. Reality show aspirations not for the kid, but for the father.. Relationship strain..
An interesting mix..
The official trailer of #Mellisai starring Kishore Kumar
– https://t.co/GBDWCB6z9XDirected by @Dhirav_G pic.twitter.com/Gx9qAxqaIM
— Ramesh Bala (@rameshlaus) December 25, 2025
Also Read… சண்டை இல்லாம இருக்கவே மாட்டாங்க போல… பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை