AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக் பாஸில் லக்ஷ்மி பிரியா – ஷமாவுக்கும் நடந்த டீல்.. குறும்படம் போட்ட விஜய் சேதுபதி!

Lakshmi Priya And Shama Deal: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று (11/10/2026) வார இறுதி என்ற நிலையில், போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்தித்துள்ளார். இதில் டாஸ்கில் ஷமா மற்றும் லக்ஷ்மி பிரியா போட்ட டீல் குறித்து குறும்படம் காட்டிய விஜய் சேதுபதி குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸில் லக்ஷ்மி பிரியா – ஷமாவுக்கும் நடந்த டீல்.. குறும்படம் போட்ட விஜய் சேதுபதி!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2026 15:43 PM IST

சின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் இந்த நிகழ்ச்சியானது விஜய் டிவி (Vijay TV) மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகிவருகிறது. ஆண்டுதோறும் விஜய் தொலைக்காட்சியில் இந்த பிக் பாஸ் சீசன் சீசன்களாக ஒளிபரப்பாகிவரும். அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் ஆரம்பமான நிலையில், இன்றுடன் மொத்தம் 35 நாட்களை கடந்துள்ளது. தற்போது 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சியானது தேவைரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 5வது வாரத்தின் இடையே மேஜிக் போஷன் என்ற டாஸ்க் நடைபெற்றிருந்தது. இதில் போட்டியாளர்கள் இரு இருவராக அணியாக புரியவேண்டும்.

அதில் லக்ஷ்மி பிரியா மற்றும் ஷமா இருவரும் டீல் போட்டு விளையாடியதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து மற்ற போட்டியாளர்களும் கூறியிருந்தனர். அந்த விதத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 35வது நாளின் 3 வது ப்ரோமோ வெளியாகி வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: முடிவிற்கு வந்தது தனுஷ் 56 படத்தின் பிரச்சனைகள்… வைரலாகும் தகவல்

ஷமா மற்றும் லக்ஷ்மி பிரியாவிற்கு குறும்படம் காட்டிய விஜய் சேதுபதி:

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி கரீஷ்மாவிடம், லக்ஷ்மி பிரியா மற்றும் ஷமாவின் டீல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியின்போது, கரீஷ்மா, நீங்க தலைவராக இருக்கும்போது என எல்லாரிடமும் சாதாரணமாக இல்லை என லக்ஷ்மி பிரியாவிடம் கேள்வி எழுப்பினேன் சார் என கூறினார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் அனிருத்திற்கு ஒரு பெரிய நெருக்கடி இருந்தது – நடிகர் ரஜினிகாந்த்

மேலும் ஜேசனிடம் விஜய் சேதுபத்தில், லக்ஷ்மி பிரியா மற்றும் ஷமாவுக்கும் இடையே என்ன டீல் இருந்தது என கேட்டார். அதற்கு அவரும் பதிலளித்தார். இதையடுத்து சாந்தினியும், ஷமா மற்றும் லக்ஷ்மி பிரியாவின் டீல் குறித்து பேசியிருந்தார். இதனால் விஜய் சேதுபதி குறும்படம் கேட்பதுபோலவே இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 35வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களோடு ஒளிபரப்பாகிவருகிறது. வைல்டர் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களுடன் மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த வீட்டில் உள்ளனர். அந்த விதத்தில் 5வது வாரத்தின் முடிவில் எந்த எலிமினேஷனும் இருக்காது என வட்டாரங்கள் கூறுகிறது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Follow Us