AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – சிம்ரன் கூட்டணி… வைரலாகும் தகவல்!

Prabhu Deva and Simran movie update | தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடிகளில் ஒன்று பிரபு தேவா மற்றும் சிம்ரன். இவர்கள் இருவரும் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – சிம்ரன் கூட்டணி… வைரலாகும் தகவல்!
கமல் ஸ்ரீதேவி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Oct 2026 15:14 PM IST

தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் இருந்து தொடர்ந்து ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி என்று ஒரு சிலர் இருப்பார்கள். பிடித்த நடிகர் மற்றும் நடிகை வெவ்வேறாக இருந்தாலும் அவர்களுடன் எந்த நடிகை, நடிகர் இணைந்து நடித்தால் மிகவும் பிடிக்கும் என்று ஒரு பட்டியலையும் வைத்து இருப்பார்கள். அப்படி தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒன்றுதான் பிரபு தேவா மற்றும் சிம்ரன். இவர்கள் இருவரும் இணைந்து நடித்தப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் வெளியான படங்கள் தற்போதும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குநராக சினிமாவில் பயணித்துவரும் நிலையில் சௌந்தர்யா தொடர்ந்து படங்களை தயாரிக்கும் பணிகளை செய்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சௌந்தர்யா தயாரிப்பில் வெளியான வித் லவ் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தப் படத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா – சிம்ரன்:

அதன்படி இந்தப் படத்திற்கு கமல் ஸ்ரீதேவி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபு தேவா மற்றும் சிம்ரன் நாயகன் நாயகியாக நடிக்க உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… எக்ஸ் பக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்வி… ஓம் படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் இந்த வாரம் 15 பேரும் நாமினேஷனில் உள்ளனர்… யார் வெளியேற வாய்ப்பு?

Follow Us