AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கும்.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!!

Weather Today: சென்னைக்கு விடுக்கப்பட்ட அதி கனமழைக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில், மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதோடு, மற்ற மாவட்டங்களில் நிலவரம் குறித்தும் காணலாம்.

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கும்.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Oct 2026 06:20 AM IST

சென்னை, அக்.19: தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என (Orange Alert) சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னதாக, சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்குறிப்பில், “மேற்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதியில் நிலவிய சூறாவளிச் சுழற்சி வலுவிழந்ததைத் தொடர்ந்து, வட சென்னை கடற்கரைப் பகுதிகளில் மேகங்களின் உருவாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் கனமழை எதிரொலி.. அமைச்சர்கள் உடனே திரும்ப முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!

இன்று கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில் இன்று (அக்.19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் மழை நிலவரம்:

தொடர்ந்து, நாளை (அக்.20) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தொடரும் கனமழை:

அதனைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (அக்.21) நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். அக்.22ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

அதேபோல், அக்.23-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இதையும் படிக்க: “வாய் துடுக்காக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” – ஆர்.எஸ். பாரதியை சாடிய சண்முகம்!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us