AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சு.. முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசிய திமுகவினருக்கு அமைச்சர் கீர்த்தனா கண்டனம்..

Minister Keerthana To DMK: அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில், பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடைத்தேர்தல் தோல்வியின் மூலம் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாகரிகமற்ற பேச்சு திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கையாகிவிட்டது என்பதைச் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நிரூபித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சு.. முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசிய திமுகவினருக்கு அமைச்சர் கீர்த்தனா கண்டனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Oct 2026 19:04 PM IST

அக்டோபர் 19, 2026: தமிழக முதலமைச்சர் விஜய்யை அவமதிக்கும் வகையில் திமுக பொதுக்கூட்ட மேடையில் பெண் நிர்வாகி ஒருவர் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதற்கு அமைச்சர் கீர்த்தனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுகவின் அரசியல் மேடைப் பேச்சு நாகரிகம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகரிகமற்ற பேச்சு திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கையாகிவிட்டது


அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில், பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடைத்தேர்தல் தோல்வியின் மூலம் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாகரிகமற்ற பேச்சு திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கையாகிவிட்டது என்பதைச் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நிரூபித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழக மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் திமுக மேடையில் பெண் நிர்வாகி ஒருவர் பேசியதாகக் குறிப்பிட்டுள்ள கீர்த்தனா, அப்போது அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா சிரித்ததாகவும், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற இனி ஆதார் எண் கட்டாயம்.. இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மேலும், “தேர்தலில் தோற்ற விரக்தி இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காக்க வேண்டும்

அரசியல் மேடையில் ஒரு பெண்ணாக நிற்பது மட்டுமே பெருமையல்ல என்றும், பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது என்றும் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

கனிமொழி மற்றும் மேயர் பிரியா ஆகியோர் தங்கள் முன்னிலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தரக்குறைவான பேச்சைக் கண்டிக்கப் போகிறார்களா அல்லது மௌனமாகக் கடந்து செல்லப் போகிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களின் மௌனம், திமுகவின் அரசியல் பேச்சு நாகரிகம் குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!

திமுகவினரின் பேச்சுகளைத் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அநாகரிகமான பேச்சுகளுக்கு வரும் தேர்தல்களில் மக்கள் தோல்வியைப் பரிசாக வழங்குவார்கள் என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யை அவமதித்ததாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டும், அதற்கு அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ள கண்டனமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us