Tamil Nadu Weather forecast: வானிலை மையம் எச்சரிக்கை – இந்த 22 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்
Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் அக்டோபர் 20, 2026 இன்று தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், மேலும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 20 : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வருகிற அக்டோபர் 25, 2026 வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 20, 2026 இன்று தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மழைக்கான காரணம் குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வட தமிழகக் கடலோரத்துக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல், சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் வரை, 1.5 முதல் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நீண்டுள்ளது. இவற்றின் தாக்கத்தால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. கனிமொழி- பிரியா சிரித்தது பொது வாழ்வுக்கு ஏற்ற செயல் அல்ல.. ஜெகதீஸ்வரி கண்டனம்!




5 மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் 20, 2026 இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 21, 2026 நாளை தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும் என்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் அக்டோபர் 22, 2026 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அக்டோபர் 23, 2026 நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : சிவகங்கையில் கூலிப்படையினரின் மனித வேட்டை.. தவெக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்.. லெப்ட்- ரைட் வாங்கிய நயினார்!
தொடர்ந்து அக்டோபர் 23, 2026 அன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களும், அக்டோபர் 24, 25, 2026 ஆகிய 2 நாட்கள் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை தேனி, மதுரை 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.