AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வடையில் இறந்து கிடந்த பல்லி.. நேரில் சென்று கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Lizard in Vada Leads to Shop Sealing Action | கன்னியாகுமரியில் உள்ள உணவகம் ஒன்றில், வடையில் பல்லி ஒன்று இறந்துக்கிடந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் வீடியோ வெளியிட்ட நிலையில், அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகள் சீல் வைத்துள்ளனர்.

வடையில் இறந்து கிடந்த பல்லி.. நேரில் சென்று கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Oct 2026 08:19 AM IST

கன்னியாகுமரி, அக்டோபர் 20 : கன்னியாகுமரியில் (Kanyakumari) கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடையில், பல்லி இருந்த நிலையில் அது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் (Food Safety Officers) நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதாவது, வடையில் பல்லி கிடந்ததன் காரணமாக அவர்கள் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். இந்த நிலையில், வடையில் பல்லி கிடந்ததன் காரணமாக கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வடையில் இறந்து கிடந்த பல்லி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு வாங்குவதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார். அவர் தான் வாங்கிய உணவில், அதாவது வடையில் பல்லி இறந்து கிடந்ததாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க : சென்னையில் இரவு நேரங்களில் தொடரும் மழை.. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்லும் தகவல்

நேரில் ஆய்வு மேற்கொண்டு சீல் வைத்த அதிகாரிகள்

இணையத்தில் வைரலான வீடியோவின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட அந்த உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்குள்ள உணவின் தரம் மற்றும் அவற்றை தயார் செய்யும் முறை குறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த உணவகத்தில், உணவு தயா செய்யப்படும் பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதையும், அந்த உணவகத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஊழியர்கள் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உகரணங்கள் எதையும் பயன்படுத்தாமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : தவெக பலத்தை உயர்த்த காய் நகர்த்தல்.. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாற வாய்ப்பு.. அமைச்சர் ஷாஜகான்!

உணவு தயாரிப்பதற்கான அடிப்படை சுகாதார நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததன் காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். இந்த சீல் தற்காலிகமானது என கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வடையில் பல்லி இருந்ததன் காரணமாக இந்த உணவகத்திற்கு தற்காலிக சீல் வைக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us