விஷம் குடித்து வகுப்பறையில் மயங்கி விழுந்த 11 ஆம் வகுப்பு மாணவி.. நெல்லையில் ஷாக் சம்பவம்!
Nagercoil Student Poisons Self in Classroom | நாகர்கோயிலில் பள்ளிக்கு வந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விஷம் குடித்து பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாகர்கோவில், நவம்பர் 22 : நாகர்கோவிலில் (Nagercoil) பள்ளி வகுப்பறையில் 11 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பள்ளி வகுப்பறையில் மாணவி விஷம் குடித்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவி
நாகர்கோவிலில் உள்ள வடசேரி என்ற பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதாவது, நவம்பர் 20, 2026 அன்று வழக்கம் போல வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க : அழுத்தம் தாங்காமல் வெடித்த பெட்ரோல் டேங்க் மூடி – ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி
மாணவி மயங்கி விழுந்ததை கண்டு சக மாணவிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தகவல் அறிந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி விஷம் குடித்திருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனை கேட்டு ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : நா பெரிய ரவுடி ஆகனும்.. அதுக்கு இதுதான் சரியான சான்ஸ்.. இளைஞரை சுற்றி வளைத்து தூக்கிய சென்னை போலீஸ்!
மாணவி விஷம் குடிக்க காரணம் என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளிக்கி விரைந்துள்ளனர். இதற்கிடையே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அப்போது மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு கடந்த சில நாட்களாக படிப்பு சரியாக வராத காரணத்தால் அவர் மன வருத்தத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.
கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்த மாணவி
அவரை பெற்றோர் சமாதானம் செய்யதபோது அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், மாணவி வகுப்பறையில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. எனவே, மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.