இன்ஸ்டாகிராமில் அதிரடி மாற்றம்.. இனி இதுபோன்ற வீடியோக்கள் அதிகம் வராது.. மெட்டா எடுத்த முக்கிய முடிவு!
Instagram Feed Recommendation Changes : இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பதிவுகள் மற்றும் வீடியோக்களில் முக்கிய மாற்றங்களை மெட்டா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து வெளியாகும் வன்முறை மற்றும் பாலியல் ரீதியாகத் தூண்டும் பதிவுகள் அதிகளவில் பரிந்துரைக்கப்படுவது கட்டுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பதிவுகள் மற்றும் வீடியோக்களில் முக்கிய மாற்றங்களை மெட்டா (Meta) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து வெளியாகும் வன்முறை மற்றும் பாலியல் ரீதியாகத் தூண்டும் பதிவுகள் அதிகளவில் பரிந்துரைக்கப்படுவது கட்டுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. . சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் தொடர்பாக மத்திய அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மெட்டா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். முன்பு வெறும் புகைப்படங்கள் பதிவேற்றும் தளமாக இருந்த இன்ஸ்டாகிராம் இன்று ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்ளும் செயலியாக மாறி வருகிறது. குறிப்பாக, பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்தும் அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப வீடியோக்கள் மற்றும் பதிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதையும் படிக்க : வங்கி பரிவர்த்தனை மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. இவற்றை பின்பற்றுங்கள்!




இந்த நிலையில், இந்திய பயனர்களுக்கு இன்ஸ்டாகிராமில் பரிந்துரைக்கப்படும் பதிவுகளில் புதிய கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வன்முறை மற்றும் பாலியல் ரீதியாகத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகள் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவது குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து வெளியாகும் இதுபோன்ற பதிவுகளின் பரவலைக் கட்டுப்படுத்த மெட்டா நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம் குறித்துக மெட்டா நிறுவனம் தனது வலைப்பதிவில் விளக்கமளித்துள்ளது. அதன்படி, வன்முறை மற்றும் பாலியல் ரீதியாக பதிவுகள் அனைத்தும் இன்ஸ்டாகிராமில் இருந்து முழுமையாக நீக்கப்படாது. மாறாக, பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பதிவுகளில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதாவது, பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் உள்ள இதுபோன்ற பதிவுகள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவில் பரிந்துரைக்கப்படாது.
கடந்த அக்டோபர் 10, 2026 அன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்திற்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருந்தது. அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவுகள் எவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டு பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், ஒரே மாதிரியான கருத்துகள் அல்லது குறிப்பிட்ட ஒரு தரப்பின் பதிவுகள் மட்டுமே பயனர்களுக்குத் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிக்க : டேட்டா இல்லாத புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்த BSNL.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் கடந்த2025 ஆம் ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியப் பயனர்கள் தற்போது பரிந்துரைக்கப்படும் பதிவுகளைச் சுமார் 50 சதவிகிதம் குறைவாகவே பார்ப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது.